உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பஸ்சை ஐ.சி.யூ.,வாக மாற்றிய டாக்டர் குழுவுக்கு குவியும் பாராட்டு

அரசு பஸ்சை ஐ.சி.யூ.,வாக மாற்றிய டாக்டர் குழுவுக்கு குவியும் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சூர்: கேரளாவில் அரசு பஸ்சில் பயணித்த பெண் திடீரென பிரசவ வலியால் அலறி துடித்ததால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்; அப்போது பெண்ணின் நிலைமை மோசமானதால் சற்றும் யோசிக்காத டாக்டர், நர்ஸ், அரசு பஸ்சை ஐ.சி.யூ.,வாக மாற்றி பிரசவம் பார்த்த 'வீடியோ' அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறதுகேரள மாநிலம் திருச்சூர் அருகே, அங்கமாலியில் இருந்து தொட்டில்பாலம் நோக்கி சென்ற கேரள அரசு பஸ்சில், 37 வயது பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்த டிரைவர், மருத்துவமனை நோக்கி பஸ்சை செலுத்தினார். ஆனால், பெண்ணின் நிலைமை மோசமாக, டாக்டரும், நர்சும் பஸ்சில் ஏறி அங்கேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு பெண் குழந்தை ஆரோக்கியமாக பிறந்ததாகவும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் டாக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பாராட்டுகளை குவித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

KRISHNAN R
மே 30, 2024 15:28

அவன்தான் மனிதன்... இல்லை இல்லை...அவர்கள் தான் கடவுள்


சுந்தரம் விஸ்வநாதன்
மே 30, 2024 10:48

எனுங்க அவ்வளவுதானா வித்தியாசம்? நம்முர் ல பகுத்தறிவுக் கொள்கைப்படி பழைய பஸ்சுக்கு மஞ்சள் கலர் பெயிண்ட் அடிச்சி புது பஸ் சுன்னு ஓட்டறாங்களே. மழை காலங்களில் பயணிகளுக்கு பஸ் சுக்குள்ளேயே மழைத் தண்ணி சப்ளை பண்றாங்களே


duruvasar
மே 30, 2024 10:35

நல்ல காலம் நம்ம ஊர் அரசு பஸ் மாதிரி கூறை வழியாக தண்ணீர் ஒழுக வில்லையே.


vijay
மே 30, 2024 10:31

கேரளாவில் பழைய பஸ்ஸா இருந்தாலும் ICU- ஆக மாற்றி சிகிச்சை அளிக்கிறாங்க. நம்மூருல பஸ்ஸுல ஓட்டை இருந்து கீழே விழுந்து பிறகு ICU - வில் சிகிச்சை கொடுக்கறாங்க. அம்புட்டுதான் வித்தியாசம்.


duruvasar
மே 30, 2024 09:36

ஈ ஏட்டன்மார்களுக்கு என்ட நன்றி என வருங்கால பிரதமர் ஒரு கடிதம் எழுதலாம்.


krishnamurthy
மே 30, 2024 08:56

நல்ல செயல்


raja
மே 30, 2024 08:07

அதானே பார்த்தேன் கேடுகெட்ட விடியல் ஆட்சியிலா இப்படின்னு... இங்கே வயத்து வலிக்கு போனா கைய ஆபரேசன் பண்ணி வெட்ரானுவோ....


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி