உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்: கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்: கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''தமிழர்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி'' என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளை இன்று (ஜூன் 3) திமுக.,வினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, முக்கிய அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். காங்., முன்னாள் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், பிரதமர் மோடியும் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதாவது: கருணாநிதியின் 100வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தனது நீண்ட ஆயுளில் பொது வாழ்வில் தமிழர்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி. அவர் அறிவாற்றல், புலமைக்காக மதிக்கப்படுபவர். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதல்வராக இருந்தபோதும், அவருடன் நான் நடத்திய பல உரையாடல்களை நினைவுகூர்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

tmranganathan
ஜூன் 05, 2024 07:30

thannozhukkamillaa suyanalam mikka kudumbakollaikku adikoliavar.ivar nooraandu vaazhndhaalenna sethaal yenna. makkal alladi madiya vendiyadhuthaan.


சுலைமான்
ஜூன் 04, 2024 10:06

ஆம்....


venugopal s
ஜூன் 03, 2024 23:49

இதற்குப் பெயர் தான் சந்தர்ப்பவாத அரசியல்!


N Sasikumar Yadhav
ஜூன் 03, 2024 23:10

தமிழக வளர்ச்சி என்பதைவிட கோபாலபுர மக்களின் வளர்ச்சி என்பதுதான் சரியானதாக இருக்கும்


Ramesh Sargam
ஜூன் 03, 2024 21:42

ஆமாமாம்... மிகவும் பாடுபட்டிருக்கிறார். கையில் காசில்லாமல், ரயிலில் டிக்கெட் எடுக்க வசதி இல்லாமல், தமிழக வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்கிற எண்ணத்தில், பாவம் கழிவறையில் ஒளிந்துகொண்டு சென்னை பயணித்து, எப்படியோ கட்சியில் சேர்ந்து, தமிழக வளர்ச்சிக்காக மிகவும் பாடுபட்டிருக்கிறார்.


Kasimani Baskaran
ஜூன் 03, 2024 21:21

சனாதனம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து இந்திக்கூட்டணியை சாய்த்த தீம்காவின் சாதனையே சாதனை. மற்றதெல்லாம் ஒரே வேதனை.


sankaranarayanan
ஜூன் 03, 2024 21:08

திருவாரூரிலிருந்து டிக்கெட்டே இல்லாமல் ரயிலேறி சென்னை வந்து தமிழ் நாட்டையே குலுக்கிய உத்தமரை நமது பிரதமர் புகழ்ந்துள்ளார்


A1Suresh
ஜூன் 03, 2024 20:22

மூன்றாம் முறையும் எங்கள் பாஜக ஆட்சி அமைய உதவியவர் மாண்புமிகு உதயநிதியும் மேதகு வீரமணியும் தான். இரட்டைகுழல் துப்பாக்கி போல செயல்பட்டனர்


சதிஷ்
ஜூன் 03, 2024 20:10

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரிகளும் இல்லை. அரசியல் சதுரங்கத்தில் காய்கள் எப்படி நகரும் என்பதை காலம் மட்டுமே கணிக்க முடியும்.


venugopal s
ஜூன் 03, 2024 20:09

யாரோ ஒருவர் ஆற்றோடு போனாலும் ஆதாயம் இல்லாமல் போக மாட்டார் என்று சொல்வார்கள்!


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ