உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரட்டை நந்திகள் உள்ள சிறப்பு கோவில்

இரட்டை நந்திகள் உள்ள சிறப்பு கோவில்

சிக்கமகளூரு, கடூரின், பிரம்ம சமுத்ரா கிராமத்தில், வைத்ய நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவ பெருமான் எதிரே, இரட்டை நந்திகள் அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அற்புதமான இந்த கோவிலை ஹொய்சாளர்கள் கட்டினர். சிவனின் எதிரே இரண்டு நந்திகள் இருப்பது, இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும். கர்நாடகாவில் இத்தகைய சிறப்பம்சம் கொண்ட ஒரே கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி சந்தர்ப்பங்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும். வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை