உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு சிற்பி வடித்த விக்ரகம் ராமர் கோவிலில் பிரதிஷ்டை

மைசூரு சிற்பி வடித்த விக்ரகம் ராமர் கோவிலில் பிரதிஷ்டை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி : கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த சிற்பக் கலைஞர் அருண் யோகிராஜ் வடித்த குழந்தை ராமர் விக்ரகம், அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ல் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுசெயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:கும்பாபிஷேகத்துக்கான சடங்குகள் இன்று முதல் துவங்கி ஜன.21 வரை நடக்கின்றன. கோயில் கருவறையில் பிரதிஷ்ட்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் விக்ரகம் ஜன. 18ல் கருவறையில் வைக்கப்பட உள்ளது.கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலை 150 - 200 கிலோ எடை உடையது. கருவறைக்குள் வைக்கப்படும் விக்ரகத்திற்கான சடங்குகள் முடிந்து ஜன. 22 மதியம் 12:20 மணிக்கு ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் சடங்கு துவங்கி 1:00 மணிக்கு நிறைவடையும்.தற்போது வழிபாட்டுக்காக கோயில் வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள ராமர் விக்ரகமும், கருவறைக்குள் இடம் பெறும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Jayaraman Ramaswamy
ஜன 16, 2024 13:33

இதில் காண்பது சிறிய ராமர் சிலை என்பது பொருத்தம். மிக மிக அழகான ராமர் சிலை. குழந்தை ராமர் வேறு சிறிய ராமர் வேறு.


Ram pollachi
ஜன 16, 2024 11:13

பூ குவியலின் மத்தியில் இருக்கும் குழந்தை ராமனை தரிசிக்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது. அதுபோல் இனிப்பு குவியலின் மத்தியில் காட்சி தரும் அனுமனை காண கோடி கண்கள் தேவை...


Arul Narayanan
ஜன 16, 2024 10:22

படத்தில் இருப்பது குழந்தை ராமர் சிலையா?


குமரன்
ஜன 16, 2024 08:27

படைப்புகள் சரித்திரத்தில் இடம் பெறும்ஜெய் ஶ்ரீராம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை