உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபானங்கள் விலை திடீர் உயர்வு

மதுபானங்கள் விலை திடீர் உயர்வு

பெங்களூரு: மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மதுபானங்களின் விலை, திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.கர்நாடகாவில், காங்கிரஸ் அரசு அமைந்த பின், தாக்கல் செய்ய முதல் பட்ஜெட்டில், மதுபானங்கள் விலை 17 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஆனாலும், மது பிரியர்கள் விரும்பி அருந்தி வருகின்றனர். ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது விற்பனையால், 500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.இதற்கிடையில், உடனடியாக அமலுக்கு வரும் வகையில், மக்கள் அதிகமாகபயன்படுத்தும் மது ரகங்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி., மது பாட்டில் மீது, 20 - 30 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.இது குறித்து, கலால் துறை அமைச்சர் திம்மாப்பூர் கூறுகையில், ''அரசு தரப்பில் மது விலை உயர்த்தப்படவில்லை. மது உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தான் உயர்த்தியுள்ளன. கலால் வரி உயர்த்தப்பட்டால், முன் கூட்டியே தெரிவிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை