உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னைப் போல ராகுலையும் ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் ஏமாற்ற மாட்டார்: ரேபரேலியில் சோனியா கெஞ்சல்

என்னைப் போல ராகுலையும் ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் ஏமாற்ற மாட்டார்: ரேபரேலியில் சோனியா கெஞ்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரேபரேலி: ''என் மகன் ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டது போல் நீங்கள் அவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார்'' என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சோனியா பேசினார்.உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் இண்டியா கூட்டணி கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராகுல், அக்கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r0gl2t8j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டத்தில் பிரியங்கா பேசுகையில், ''கடந்த 10 ஆண்டுகளாக, நாட்டின் சாமானியர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த நாடு தனது குரலைக் கேட்க விரும்புகிறது. ஆனால் நரேந்திர மோடியின் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த பா.ஜ., அரசை அகற்ற வேண்டும் என்ற புயல் வீசுகிறது,'' என்றார்.

உண்மையான உறவு

அகிலேஷ் யாதவ் பேசியதாவது: ராகுல் ரேபரேலியில் வரலாற்றில் பொறிக்கப்படும் அளவிற்கான வெற்றிப்பெறுவார் என இந்த மாபெரும் கூட்டம் தீர்மானித்துள்ளது. அதேபோல், ரேபரேலியில் பா.ஜ.,வை அகற்ற வேண்டும் எனவும் மக்கள் முடிவு செய்துள்ளனர். நாட்டின் தலைவர் (மோடி) செல்லும் இடமெல்லாம் போலியான உறவை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். ராகுலுக்கும் ரேபரேலிக்கும் உண்மையான உறவு இருப்பதையும் அவர் உணர வேண்டும். ரேபரேலி பெயரும், ராகுலின் பெயரும் ஆங்கிலத்தில் 'ஆர்' என்ற எழுத்தில் துவங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கங்கை போல தூய்மையானது

சோனியா பேசியதாவது: எங்கள் குடும்பத்தின் வேர்கள் இந்த மண்ணின் மண்ணோடு இணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவு, கங்கை நதியைப் போல தூய்மையானது; இந்த உறவு அவாத் மற்றும் ரேபரேலி விவசாயிகளின் போராட்டத்துடன் துவங்கியது. இந்திராவின் இதயத்தில் ரேபரேலிக்கு தனி இடம் இருந்தது. அவர் மிகவும் நெருக்கமாக வேலை செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.

ஏமாற்ற மாட்டார்

அனைவரையும் மதிக்க வேண்டும், பலவீனமானவர்களைக் காக்க வேண்டும், நீதிக்கு எதிராகப் போராட வேண்டும், புனிதமாக இருக்க வேண்டும் என இந்திராவும் ரேபரேலி மக்களும் எனக்குக் கொடுத்த அதே பாடங்களை ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் கொடுத்திருக்கிறேன். உங்கள் அன்பு என்னை ஒருபோதும் தனிமைப்படுத்தவில்லை. என்னிடம் உள்ள அனைத்தும் உங்களுடையது. என் மகனை உன்னிடம் ஒப்படைக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டது போல் நீங்களும் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

ராகுல்

ராகுல் பேசியதாவது: இங்கு வந்துள்ள ஊடகவியலாளர்களை வரவேற்கிறேன். அவர்கள் நமது நண்பர்கள் அல்ல, மோடி மற்றும் அதானியின் நண்பர்கள். யாரிடமாவது நீங்கள் சென்று கேட்டால் நாட்டில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை இருப்பதாக கூறுவார்கள். அதுவே ஊடகங்களிடம் நாட்டுப்பிரச்னை பற்றிக்கேட்டால், அம்பானி கல்யாணம் நடக்கிறது பாருங்கள், நரேந்திர மோடி என்ன சொல்கிறார் என பாருங்கள் என்பார்கள்.நான் என்ன வேண்டுமென்றாலும் பிரதமரை சொல்ல வைக்க முடியும். 'மோடி அவர்களே, நீங்கள் அதானி-அம்பானியின் பெயர்களை ஒருபோதும் பேசாதீர்கள்' என்று நான் சொன்னேன், அடுத்த இரண்டு நாட்களில், 'அதானி-அம்பானி' என்று நரேந்திர மோடி கூறுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

casbbalchandhar
மே 20, 2024 13:45

ராகுலை காப்பாற்றிய வாஜ்பாய் செய்த வரலாற்று பிழை இன்று நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்


நரேந்திர பாரதி
மே 20, 2024 05:08

என்னை பொறுத்தவரையில் ராவுளுக்கு எதிராக ரேபரேலியில் பாஜக சரியான வேட்பாளரை நிறுத்தவில்லை என்பதே உண்மைநல்ல கண்ணாமூச்சி விளையாட்டு


Aanandh
மே 18, 2024 23:06

சரியான கிரிமினல் மற்றும் அயோக்கிய கும்பல் இந்தியாவை கொள்ளை அடிக்கும் ஏமாற்றுக் குடும்பம்


SP
மே 18, 2024 10:25

அப்ப வயநாடு தொகுதிமக்கள்?


நரேந்திர பாரதி
மே 25, 2024 05:41

பிம்பிளிக்கி பிளாப்பி :


Lakshminarasimhan Ms
மே 18, 2024 09:59

Why you are acting ,we belive


பேசும் தமிழன்
மே 18, 2024 09:55

ராகுலை ஏற்றுக் கொள்ளுங்கள்..... நான் ஏமாற்றியதை போல.... அவர் ஏமாற்ற மாட்டார் என்று கூறுகிறாரா ??? உங்கள் குடும்ப பெயர் முதற்கொண்டு அனைத்தும் போலி என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.... இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.


R SRINIVASAN
மே 18, 2024 07:39

அகிலேஷ் யாதவ்க்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து நேரு குடும்பத்தை ஆதரிக்காதீர்கள் இந்திரா எமெர்கென்சியைக் கொண்டு வந்தது... தேசத்தைவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கியதை மறந்து விடாதீர்கள் உங்கள் தந்தை முலாயம் சிங்க் யாதவ் எந்தக்காலத்திலும் காங்கிரசை ஆதரித்ததில்லை


A1Suresh
மே 18, 2024 05:04

சீனாவில் ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்டதை சொல்லவா ? பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் சீனாவிற்கு வசதியாக அருணாசல பிரதேசத்தில் நுழையாமல் கைவிட்டதை சொல்லவா ?


A1Suresh
மே 18, 2024 05:02

இத்தாலி சென்று விடுங்கள் மக்கள் பாவம் இன்னும் எத்தனை நாளைக்கு பாமரர்களாக, ஏழைகளாக வைத்திருப்பீர்கள் ?


A1Suresh
மே 18, 2024 05:01

எத்தனை ஏழைகளுக்கு உங்கள் குடும்பம் அட்லீஸ்ட் ஆங்கிலம் பேசவாவது சொல்லிக் கொடுத்துள்ளீர்கள் ?


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை