உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம்: ஓபிஎஸ்., மீண்டும் மனு

அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம்: ஓபிஎஸ்., மீண்டும் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ அ.தி.மு.க., வேட்பாளர்களின் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டது சட்ட விரோதம்'' என தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் மனு அளித்து உள்ளார்.அ.தி.மு.க., கட்சி பெயர், கொடியை பயன்படுத்த பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இ.பி.எஸ்., தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் மனு அளித்தார். அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் மீண்டும் மனு அளித்து உள்ளார். அந்த மனுவில், சட்ட விதிகள், நீதிமன்ற உத்தரவுகளை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அ.தி.மு.க., வேட்பாளர் படிவத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் ‛ஸ்பெசிமன்' லும் இ.பி.எஸ்., பன்னீர்செல்வம் கையெழுத்து உள்ளது. இருவர் கையெழுத்து இல்லாமல் அ.தி.மு.க., வேட்பாளர்களின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
மார் 29, 2024 22:06

தன் முயற்சியில் சற்றும் தளராத வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறுகிறது


Srinivasan Krishnamoorthi
மார் 29, 2024 20:00

India is bound by judiciary OPS also knows this Though USA is not understanding this on rejection of CIA pro case with Supreme Court and inviting Islamic Separatists of Kashmir to their Embassy at New Delhi for Iftar Party and disrespecting Indian judiciary with an external intrusion in Indian Democracy & Judiciary, OPS must definitely respect Indian Judiciary


Vathsan
மார் 29, 2024 19:07

இந்த ஆளு ஒரு காமெடி பீஸ் TTV க்கு கொடுத்த மரியாதை கூட OPS க்கு இல்லை பாஜகவில் ஒரு சீட்டு OPS பாஜகவை நம்பி மோசம் போய் விட்டு இப்போ கதறினால் எப்படி EPS சரியான இடத்தில்தான் இவரை வைத்து இருந்தார்


vijay s
மார் 29, 2024 19:07

innum nalla kadharunga.seriya kekala


Srinivasan Krishnamoorthi
மார் 29, 2024 18:57

specimen in EC office not amended yet?


ravi
மார் 29, 2024 17:48

innum nalla kadharunga..seriya kekala


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை