உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதியை குற்றவாளியாக்கிய எஸ்.ஐ., மீது நடவடிக்கை

நீதிபதியை குற்றவாளியாக்கிய எஸ்.ஐ., மீது நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ : உத்தர பிரதேசத்தில் திருட்டு வழக்கு விசாரணையின் போது, குற்றவாளி பெயருக்கு பதில் நீதிபதியின் பெயரை ஆவணங்களில் எழுதிய எஸ்.ஐ., மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.உ.பி.,யில், 2001ல் நடந்த திருட்டு வழக்கில், குற்றவாளி ராஜ்குமார் என்ற பப்பு போலீசில் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளார்.இந்த வழக்கை விசாரித்த பிரோஸாபாத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி நக்மா கான், குற்றவாளியை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளித்தார்.இந்த வழக்கு, கடந்த மாதம் 23ல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அதிகாரி எஸ்.ஐ., பன்வாரிலால் நீதிமன்றத்தில் ஆஜரானார்.அப்போது, குற்றவாளி நக்மா கானை தேடி அவரது வீட்டுக்கு சென்றதாகவும், அவர் வீட்டில் இல்லை என்றும் கூறிய அவர், நக்மா கானுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கும்படி கேட்டுக் கொண்டார்.இதைக் கேட்ட நீதிபதி நக்மா கான் அதிர்ச்சி அடைந்தார். எஸ்.ஐ., தாக்கல் செய்த ஆவணத்தில் குற்றவாளி ராஜ்குமாரின் பெயர் இடம் பெற வேண்டிய இடத்தில், நீதிபதி நக்மா கானின் பெயரை எஸ்.ஐ., தவறுதலாக எழுதியது தெரியவந்தது.பணியில் அலட்சியமாகவும், அடிப்படை நடைமுறைகள் கூட தெரியாமல் போலீஸ் பணி செய்யும் எஸ்.ஐ., பன்வாரிலால் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, ஐ.ஜி.,க்கு நீதிபதி நக்மா கான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சிங்
ஏப் 15, 2025 09:51

செம சுறு சுறுப்பு கோவாலு. 2091 ல நடந்த குற்றத்துக்கு இன்னிக்கி ஒரு நீதிபதி முழிச்சிக்கிட்டு விசாரிக்கிறாராம். எஸ்.ஐ மேலே தப்பு சொல்லலாமா?


அப்பாவி
ஏப் 15, 2025 09:48

உ.பி ல ஐ.பி.எஸ் லட்சணம். நல்லவேளை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளாம இருந்தாங்களே


Iniyan
ஏப் 15, 2025 08:16

எஸ் ஐ செய்தது சரியே.


Kasimani Baskaran
ஏப் 15, 2025 03:58

அரசியலமைப்புச்சட்டமே தெரியாத நீதிபதிகள் இருக்கும் பொழுது இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வது சிறுபிள்ளைத்தனம்.


மீனவ நண்பன்
ஏப் 15, 2025 02:25

சிரிப்பு போலீஸ் ..நக் மா நடித்த சினிமா பார்த்து விட்டு வந்திருப்பார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை