வாசகர்கள் கருத்துகள் ( 3 )
Air india க்கு இப்போ கட்டம் சரியில்லை போல
ஏர் இந்தியா என்றாலே இப்போ பயம் வருது
Should not have landed when heavy rain and wet runway are there.NEUTRAL media reports bursting of three tyres and damage to engine
மும்பை: கொச்சியில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது; எனினும், அசம்பாவிதம் இன்றி விமானம் தரை இறங்கியது.மும்பையில் கனமழை காரணமாக கொட்டி தீர்த்து வருகிறது. இந்த சூழலில், கொச்சியில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி சென்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jmxt4c5t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்தார். அசம்பாவிதம் எதுவும் இன்றி விமானம் நிறுத்தப்பட்டது. ஓடுபாதையில் சிறிய சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து, ஏர் இந்தியா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது: விமானம், தரையிறங்கும் போது, கனமழை காரணமாக ஓடுபாதையில் இருந்து விலகியது. எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். விமானத்தில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சிறிய தாமதங்களைத் தவிர வேறு எந்த விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கடந்த சில தினங்களாக மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால், பயணிகள் பீதி அடைந்தனர்.
Air india க்கு இப்போ கட்டம் சரியில்லை போல
ஏர் இந்தியா என்றாலே இப்போ பயம் வருது
Should not have landed when heavy rain and wet runway are there.NEUTRAL media reports bursting of three tyres and damage to engine