வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பண்டிகைக் காலத்தில் வேலை செய்யும் பைலட்கள், பணியாளர்களுக்கு டபுள் சம்பளம் குடுக்கணும். மேலும் வ நாட்களில் விமானம் காலியாப் போனாலும் அரசுக்கு கவலையில்லை. காசிருக்கறவன் அதிக விலை குடுத்துப் போறான். இதே அரசு தத்கால்னு ரயில் டிக்கட் வித்து காசு பாக்கலியா? அதையெல்லாம் எவன் கேள்வி கேப்பான் கோவாலு? பேசாம விமான சேவையையும் இவனுங்களே எடுத்து நடத்தி மலிவு விலையில் எல்லிரையும் கூட்டிட்டுப் போகட்டும்.
பண்டிகை காலம் என்று மட்டுமல்ல, இப்போதெல்லாம் எல்லா நாட்களிலும் விமானங்களில் பகல் கொள்ளை தான் நடக்கிறது விமான சேவைகளில் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனம் மட்டும் கோலோச்சுவதாலோ என்னவோ கட்டணங்கள் குறைக்கப்படாமல் விண்ணில் பறக்கின்றன. கட்டண நிர்ணயங்களில் Dynamic Pricing Policy ஏற்புடையது என்றாலும் விலை குறைப்பு என்பதையே தற்போது காண முடிவதில்லை. Connecting flightல் மட்டுமே கட்டண குறைவு அறிவிக்கிறார்கள் ஆனால் பயண நேரம் அதிகம். மத்திய அரசு நிச்சயம் இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும்
இது காலம் காலமாக உலகம் முழுவதும் நடைபெறுகிறது. முன்பு கோடைகாலத்தில் மட்டும் அதிகரித்து வந்தார்கள். பிறகு முக்கியமான பண்டிகை வருகிறதோ அப்போதெல்லாம் உயர்த்த ஆரம்பித்தனர். இப்போது எப்போதெல்லாம் கூட்டம் அதிகமாகிறது அப்போது உயர்த்துகிறார்கள். இது பகல்கொள்ளை என்றே கூறலாம். கடந்த வாரம் இந்தியாவிற்குள் பயணம் செய்தென். அப்போது சீக்கிரம் உங்களின் சீட்டினை முடிவு செய்து கொள்ளுங்கள், இல்லை வேறு ஒருவருக்கு கொடுக்கவும் வாய்ப்புள்ளது என்று செய்தி வருகிறது. அப்படி ஒரு சீட்டை நான் முடிவு செய்ய நானூறு ரூபாய் கொடுக்க வேண்டும். இப்படி போக்குவரத்து சிலவு போக, சீட்டுக்கும் பணம் தர வேண்டும். இதில் இவர்கள் டீ, காபி, சாப்பாடு, செய்தித் தாள் என்று எதையும் ஒடுக்கப் போவதில்லை. தண்ணீர் அல்லது சூடு தண்ணீர் கேட்டால் கொடுக்கிறார்கள், பரவாயில்லை, அதற்கும் நூறு ரூபாய் கொடு என்று சொல்லாமல் இருக்கிறார்களே.