உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2026 சட்டசபை தேர்தலுக்காக அண்ணாமலைக்கு அமித் ஷா... அசைன்மென்ட்! :அ.தி.மு.க.,வை 3ம் இடத்திற்கு தள்ள வேண்டும் என உத்தரவு

2026 சட்டசபை தேர்தலுக்காக அண்ணாமலைக்கு அமித் ஷா... அசைன்மென்ட்! :அ.தி.மு.க.,வை 3ம் இடத்திற்கு தள்ள வேண்டும் என உத்தரவு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை மாற்றப் போவதாக பேச்சு எழுந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்கான 'அசைன்மென்ட்'டை, அவரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ., பின்பற்றிய பாணியை தமிழகத்திலும் பின்பற்றுவதுடன், அ.தி.மு.க.,வை மூன்றாம் இடத்திற்கு தள்ளும் வகையில் வியூகம் வகுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zakivez5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் போட்டியிட்ட கூட்டணி, 18 சதவீத ஓட்டுகளை பெற்றது. ஆனாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.அதனால், தோல்விக்கு பொறுப்பேற்று, தன் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, கட்சித் தலைவர் நட்டாவிடம் அண்ணாமலை கடிதம் கொடுத்தார்; அவர் அதை ஏற்கவில்லை.

எதிர்கால திட்டம்

இருப்பினும், மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற தகவல் கசிந்து, பூதாகரமாக சுழன்றது. அதற்கேற்ப, 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பிலான சான்றிதழ் படிப்புக்காக, லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கு அண்ணாமலை மூன்று மாதங்கள் செல்ல உள்ளதாகவும், அதனால், இடைக்கால தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்கு தரப்படும் என்றும் கூறப்பட்டது.இந்நிலையில், மேலிட அழைப்பில் டில்லி சென்ற அண்ணாமலையிடம், தமிழகத்தில் கட்சி வளர்ச்சி குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் நிறைய கருத்துகளை அமித் ஷாவும், கட்சியின் தேசிய தலைவர் நட்டாவும் பகிர்ந்துள்ளனர்.அதில் முக்கியமானது, 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை மூன்றாம் இடத்திற்கு தள்ள வேண்டும் என்பதே. இதற்கு, தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ., பின்பற்றிய பாணியை பின்பற்றும்படியும் வலியுறுத்தியுள்ளனர். அதாவது, சில மாதங்களுக்கு முன் தெலுங்கானாவில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்., பாரத் ராஷ்ட்ரீய சமிதி, பா.ஜ., என, மும்முனை போட்டி நிலவியது. இந்தப் போட்டியில், அங்கே அசுர சக்தியாக வளர்ந்து ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்ட்ரீய சமிதி, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. பா.ஜ., இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது; அத்துடன், 14 சதவீத ஓட்டுகளை பெற்றது.

மேலிட உத்தரவு

அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் ஓட்டு சதவீதத்தை இரு மடங்காக்க வேண்டும் என, உள்ளூர் தலைவர்களுக்கு பா.ஜ., மேலிடம் கட்டளையிட்டது.அதை ஏற்ற உள்ளூர் தலைவர்கள் மிகக் கடுமையாக களத்தில் பாடுபட்டனர். இதனால், 33 சதவீத ஓட்டுகளை பா.ஜ., பெற்றது. மொத்தமுள்ள 17 இடங்களில், எட்டு இடங்களையும் பிடித்தது. இந்த தேர்தலிலும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. சொந்த மாநிலத்திலேயே அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.இதே மாதிரியான சூழல் தமிழகத்திலும் உள்ளது. பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய அ.தி.மு.க., தனி அணி அமைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது. இருப்பினும், பெரும்பாலான ஓட்டு வங்கியை பா.ஜ.,விடம் இழந்ததுடன், 25 சதவீதத்திற்குள் சுருண்டது.தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்திலும், சில தொகுதிகளில் பெரும் சரிவு கண்டு மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது. அ.தி.மு.க.,வின் இந்த சரிவை வாய்ப்பாக பயன்படுத்தி, 2026 சட்டசபை தேர்தலுக்குள், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை, பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு இழுக்க வேண்டும். இதைச் செய்தால், பா.ஜ., கூட்டணியின் ஓட்டு வங்கி எளிதாக, 30 சதவீதத்தை கடந்து விடும்.இதன் வாயிலாக அ.தி.மு.க.,வை தமிழகம் முழுதும் மூன்றாம் இடத்திற்கு தள்ள வேண்டும்.

மக்கள் நலத்திட்டம்

அதற்கு தொடர்ச்சியாக மக்கள் பணியாற்றுவதுடன், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.தெலுங்கானாவில் கட்சியினர் எப்படி செயல்பட்டு, பா.ஜ.,வை முன்னேற்றினர் என்பதை முழுமையாக அறிந்து, அதை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்றும், அண்ணாமலையிடம் அமித் ஷாவும், நட்டாவும் கூறியுள்ளனர். இந்த விஷயங்களை சமீபத்தில் திருப்பூரில் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளிடம் தெரிவித்த அண்ணாமலை, அனைவரும் மேலிட உத்தரவுக்கு ஏற்றபடி செயல்பட வேண்டும் என்று முடுக்கி விட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

MADHAVAN
ஆக 14, 2024 20:38

பாவம் வானதி


MADHAVAN
ஆக 14, 2024 20:36

டெபாசிட் வாங்கமாட்டானுங்க, இருக்குற 4 தொகுதியும் போய்டும் இப்படி பேசி பேசி நோட்டாவை ஜெயிக்க பாக்குறானுங்க


spr
ஆக 13, 2024 06:55

இது உண்மையானால் முட்டாள்தனமான ஒன்றே அஇஅதிமுகவை மூன்றாம் இடத்தில் தள்ள முயன்றால் அதன் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக திமுக பக்கம் சாய்வார்கள் திமுக அசுரர் பலம் பெறும். திமுகவின் தொண்டர் படை முழுவதுமாக மூளைச்சலவை செய்யப்பட கூட்டம் அத்தனை எளிதில் அதனை மாற்றுவதோ கட்சியை அழிப்பதோ எளிதல்ல அதற்குள் அண்ணாமலை அமீத ஷா மோடி உட்பட அனைவரும் காணாமல் போய்விடுவார்கள் அமித் ஷா மற்றும் அண்ணாமலை இருவரும் புத்திசாலியாக இருந்தால் முதலில் இ பி எஸ் தரப்புக்கு ஆதரவு தந்து அவரோடு இணைந்து, ஒரு சில சட்ட மன்ற இடங்களை பெற்று ஒரு கட்சியாக மதிக்கப்பட வேண்டும் பின் திமுகவை வீழ்த்த வேண்டும் பின்னர் அவசியமானால் இபிஸ் தரப்பை வீழ்த்த முயற்சிக்கலாம் இபிஎஸ் தரப்பு தானாகவே உடையும்


Salem Sundar
ஆக 12, 2024 22:04

நீங்கள் எத்த திட்டமும் எங்க வேண்டுமானலும் போடலாம்..ஆனால் இது தமிழகம்.. திராவிட மண்..இங்கு திராவிட கட்சிகள் தான் ஆட்சிக்கு வரும்.. அதிமுக வை பிரித்து நீங்கள் சாதிக்கலாம் என்ற கனவு பலிக்காது..


K.n. Dhasarathan
ஆக 12, 2024 20:50

ஐயா அண்ணாமலை ஒரு பைசா கூட தரக்கூடாது தமிழ்நாட்டிற்கு , ஆனால் ஒட்டு மட்டும் வேண்டும் என்றால் இங்கே எல்லாம் காதில் பூ சுற்றிக்கொண்டு உள்ளார்களா ? கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் எப்படி தீட்டம் போடுகிறீர்கள்? மதுரை அய்ய்ம்ஸ் மறுபடி படுத்துவிட்டது, மெட்ரோ ரயில் திட்டம் -2 க்கு பணம் இது வரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை, தூத்துக்குடி வெள்ளம் சேதம் ஆனால் கேட்ட பணம் கிடைக்காது ஆனால் தமிழக வரி மட்டும் கூச்சம் இல்லாமல் வாங்கிக்கொள்வோம், ஆயிரம் அண்ணாமலை வந்தாலும் ஒரு புல்லையும் புடுங்க முடியாது. கனவு காண வேண்டாம், இன்னும் கேவலப்பட்டு போகும் பொய்.ஜே.பி.


Sakthi muthuram Sakti muthuram
ஆக 12, 2024 21:37

நீங்க கோபாலபுர அடிமையாகவே இருங்க. 1000 ரூபாய கொடுத்துட்டு எத்தன திட்டங்கள ஒழிச்சிட்டாங்கனு தெரியுமா. ஸ்கூல் பிள்ளைகளுக்கு சைக்கிள், கல்லூரி பிள்ளைகளுக்கு லேப்டாப், பட்டதாரி பெண்களுக்கு 50000 திருமண உதவி,தாலிக்கு தங்கம் முதல் ஏழைகளை வாழ்வைத்த அம்மா உணவகம் வரை.


ramesh
ஆக 12, 2024 22:43

சக்தி நீ தமிழ் நாட்டை பற்றி கவலைப்படாத கமலாலயம் அடிமையாக இருக்கிறாயே . நீ போடும் கருத்தை பார்த்தால் கன்னடியன் போல தெரிகிறதே


T.sthivinayagam
ஆக 12, 2024 20:26

அயோத்தியில் பாஜகாவுக்கு ராமர் தந்த தீர்ப்பை ஹிந்துக்கள் மீறமாட்டார்கள் மக்கள் பேசுகின்றனர்


s.sivarajan
ஆக 12, 2024 20:03

சட்டசபை தேர்தலுக்கு அ தி.மு.க அல்லது தி. மு. க. கூட்டணியில் இடம்பெறத்தான் ப.ம.க உட்பட எல்லா கட்சிகளும் விரும்பும்


Indian
ஆக 12, 2024 18:58

உங்க ஒரவஞ்சனையை ........., மக்கள் அனைவரும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் ,


Jai
ஆக 12, 2024 18:57

சின்னத்திற்கு மட்டுமே ஓட்டு போடும் அடிமை வாக்காளர்கள் இருக்கும் வரை முதல் இரண்டு இடம் மாற்றமில்லை.


Indian
ஆக 12, 2024 18:56

தாம் முன்னேற வேண்டும் என்று நினைக்காமல் அடுத்தவனுக்கு குழி பறித்து தள்ளி விட்டு அழிக்க நினைக்கும் நல்ல உள்ளங்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை