உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹசாரேக்கு ஆதரவாக வீடுகளில் வெள்ளைக் கொடி

ஹசாரேக்கு ஆதரவாக வீடுகளில் வெள்ளைக் கொடி

சென்னை: அன்னா ஹசாரேக்கு ஆதரவாக,'இந்திய குடிமக்களாகிய நாம்' அமைப்பு கேட்டுக் கொண்டபடி, சென்னையில் பல வீடுகளில் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது. ஊழலை ஒழிக்கவும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்பதற்கு வலியுறுத்தியும் சென்னையில், 'இந்திய குடிமக்களாகிய நாம்' அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், கடந்த 24ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில், வலுவான லோக்பால் மசோதா நிறவேற்றப்பட வேண்டும் என்று, டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் செய்து வரும் அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் வெள்ளைக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்றும், வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையொட்டி சென்னையில், ராஜா அண்ணாமலைபுரம், கெனால் சாலை, ஸ்டோன் லிங் அவென்யூ பகுதிகளில் உள்ள பல வீடுகளில் , வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி