மேலும் செய்திகள்
வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு ஷோ: பாஜவினர் உற்சாகம்
3 hour(s) ago | 5
தவறுக்கு துணை போனது கிடையாது : சொல்கிறார் அஜித் பவார்
3 hour(s) ago | 2
பெங்களூரு : “கர்நாடகாவுக்கு மூன்று துணை முதல்வர்கள் நியமிக்கும் ஆலோசனை, எங்களிடம் இல்லை,” என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. இங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், தற்போது லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்துகிறது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, முக்கிய தலைவர்களை அவ்வப்போது டில்லிக்கு வரவழைத்து, ஆலோசனை நடத்துகிறது.இம்முறை எட்டு முதல் ஒன்பது அமைச்சர்களை, லோக்சபா தேர்தலில் களமிறக்க, காங்கிரஸ் மேலிடம் ஆலோசிப்பதாக தகவல் வெளியானது. குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என, மாநில தலைவர்களுக்கு கட்டளையிட்டுள்ளது. இதற்காக மாநில காங்கிரஸ் தலைவருமான, துணை முதல்வர் சிவகுமார் தயாராகிறார்.அனைத்து தொகுதிகளிலும், திறமையான வேட்பாளர்களை களமிறக்க ஆர்வம் காண்பிக்கிறார். வேட்பாளர்கள் இல்லாத தொகுதிகளில், பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களை காங்கிரசுக்கு அழைத்து வந்து, லோக்சபா வேட்பாளராக்க முயற்சிக்கிறார். கட்சியில் ஏற்பட்டுள்ள உட்பூசலை சரி செய்வதிலும், அக்கறை காண்பித்துள்ளார்.இவரது சுறுசுறுப்பை கண்டு, முதல்வர் சித்தராமையா ஆதரவாளர்கள் கிலி அடைந்துள்ளனர். கூடுதல் துணை முதல்வர்களை கொண்டு வந்து, சிவகுமாரின் ஆட்டத்துக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கின்றனர்.துணை முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ள உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி உட்பட, சிலர் முதல்வருக்கு ஆதரவாக நின்று, சமுதாய வாரியாக மூன்று துணைமுதல்வர்களை நியமிக்கும்படி, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.ஆனால், இதற்கு சிவகுமார் வாய்ப்பளிப்பாரா என்பது சந்தேகம். ஏனென்றால், சட்டசபை தேர்தல் முடிவு வெளியான பின், முதல்வர் பதவிக்காக முட்டி மோதிய சிவகுமாருக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அப்போது அவர், மாநில காங்., தலைவர் பதவியில் தன்னையே நீட்டிக்க வேண்டும். கூடுதல் துணை முதல்வர் நியமிக்கக் கூடாது என்ற நிபந்தனைகள் விதித்ததாக கூறப்பட்டது.எனவே, கூடுதல் துணை முதல்வர்கள் நியமிப்பது கஷ்டம் என தெரிந்தும் கூட சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள், தொடர்ந்து நெருக்கடி கொடுப்பது, மேலிடத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கலபுரகியில் நேற்று கூறியதாவது:கர்நாடகாவில் மூன்று துணை முதல்வர்கள் நியமிக்கும் ஆலோசனை, எங்களிடம் இல்லை. இது வெறும் ஊகம். மூன்று துணை முதல்வர்கள் நியமிக்கும்படி, யாரும் எங்களிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை. இதுகுறித்து, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் ஏற்கனவே தெளிவுபடுத்தினர்.டில்லியில் இன்று முக்கியமான கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிப்போம். ஏற்கனவே லோக்சபா தேர்தலுக்கு பார்வையாளர்களை நியமித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 5
3 hour(s) ago | 2