உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.யில் 69 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

உ.பி.யில் 69 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

அலகாபாத்: உத்திரபிரதேசத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததால் 69 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமனற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.உத்திரபிரதேசத்தில் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் மாநிலம் முழுதும் 69 ஆயிரம் துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு பெற்ற பணி நியமனம் பெற்றனர். இந்நியமனத்தி்ல் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இதில் அரசு விதிமுறைகளின்படி பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததால், 69 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து, இட ஒடுக்கீடு அடிப்படையில் 3 மாதங்களுக்குள் புதிய பட்டியலை தயாரிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பல்லவி
ஆக 18, 2024 22:14

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது முதுமொழி


Rakesh
ஆக 17, 2024 00:30

வந்தவரை வாழ வைக்கும் தமிழ் நாடு


Ramesh Sargam
ஆக 16, 2024 22:25

திறமை, தகுதி உள்ளவர்களை பணியில் அமர்த்துங்கள்.


subramanian
ஆக 16, 2024 22:18

வேலை கிடைத்தவர்கள், இப்போது எப்படி வருந்துவார்கள்.? எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.... மறுபடியும் இவர்களுக்கெல்லாம் வேலை கிடைக்கவேண்டும்.


சுரேஷ்
ஆக 16, 2024 22:13

பாஜக அராஜக போக்கிற்கு சம்மட்டி அடி.


தமிழ்வேள்
ஆக 17, 2024 09:34

இதேமாதிரி வேலை நீக்கம் பிஹாரில் நடந்த போது சமூக நீதிக்கு ஆபத்து ஐயோ குய்யோ ன்னு ஏம்பா கூவுநீங்க?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை