உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விசைப்படகு மீனவர்கள் வசதிக்காக அரபிக்கடலில் செயற்கை பாறைகள்

விசைப்படகு மீனவர்கள் வசதிக்காக அரபிக்கடலில் செயற்கை பாறைகள்

உத்தர கன்னடா: மீனவர்களின் வசதியாக, உத்தர கன்னடா, உடுப்பி மாவட்டத்தின் அரபிக்கடலில் மீன் உற்பத்திக்கு உதவும் வகையில், செயற்கை பாறைகள் அமைக்கும் திட்டம் நேற்று துவங்கியது.கடந்த சில ஆண்டுகளாக உத்தர கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் அரபிக்கடலில் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதற்கு 'லைட் பிஷ்ஷிங், புல் ட்ராலிங்' உட்பட அறிவியல் பூர்வமற்ற மீன்பிடி முறைகளால், விசைப்படகு மீனவர்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை.அப்படிப்பட்ட மீனவர்கள் பயன்பெறும் வகையில், மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து, உத்தர கன்னடா மாவட்டத்தில், 25 இடங்களிலும்; உடுப்பியில் 31 இடங்களிலும் செயற்கை பாறைகள் அமைத்து, மீன்வளத்தை அதிகரிக்க மீன்வளத்துறை திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக மீன்வளத்துறை இணை இயக்குனர் பிபின் போப்பண்ணா கூறியதாவது:அறிவியல் பூர்வமற்ற மீன்பிடி முறைகளால், விசைப்படகு மீனவர்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. அவர்கள் பயன் பெறும் வகையில், 17 கோடி ரூபாய் செலவில் விசைப்படகு முறைப்படி மீன் பிடிக்கும் மீனவர்களுக்காக, கடற்கரையில் இருந்து 4 முதல் 5 கடல் மைல் தொலைவில், செயற்கை பாறைகள் அமைக்கப்படுகின்றன.ஒவ்வொரு பாறையும் 400 முதல் 500 கிலோ எடை இருக்கும். 'கிரேன்' மூலம் மணல் மேடு உள்ள இடத்தில் இவை கொண்டு சென்று இறக்கப்படும்.செயற்கை பாறைகள் அமைப்பதால், அரிய வகை மீன் இனங்கள் வாழ உதவும். மீன் வளர்ப்புக்கு ஏற்ற சூழல் அமைந்தால், ஆழ்கடல் மீன்கள், இனப்பெருக்கம் செய்ய அருகில் உள்ள பகுதிக்கு வரும். இதனால் மீனவர்கள் பயன் பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.விசைப்படகு மீனவர்ளின் நிதி நெருக்கடியை உணர்ந்து, தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இத்திட்டம் ஏற்கனவே தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளது.மங்கள வைத்யா,மீன் வளத்துறை அமைச்சர்� விசைப்படகு மீனவர்கள் வசதிக்காக, அரபிக்கடலின் ஆழ்கடலுக்கு கொண்டு செல்லப்பட்ட செயற்கை பாறைகள். � தயாராக உள்ள செயற்கை பாறைகள். இடம்: பட்கல், உத்தர கன்னடா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை