உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதம் பெயரில் நடக்கும் அட்டூழியங்கள்: மோகன் பகவத் பேச்சு

மதம் பெயரில் நடக்கும் அட்டூழியங்கள்: மோகன் பகவத் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: உலகில் மதத்தின் பெயரால் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளும், அட்டூழியங்களும், மதம் பற்றிய தவறான புரிதல்களால்தான் நடந்துள்ளது,'' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மதம் குறித்த தவறான புரிதலால் உலகில் அட்டூழியம் நடந்து வருகின்றன. மதத்தை சரியாக விளக்கும் சமுதாயம் அவசியம். மதம் முக்கியமானது. அதனை முறையாக கற்பிக்க வேண்டும். மதத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால், மதத்தை பற்றிய பாதி அறிவு அதர்மத்திற்கு வழிவகுக்கும். மதத்தை பற்றிய முழுமையற்ற மற்றும் முறையற்ற அறிவு அதர்மத்தை நோக்கிச் செல்லும்.உலகில் மதத்தின் பெயரால் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளும், அட்டூழியங்களும், மதம் பற்றிய தவறான புரிதல்களால்தான் நடந்துள்ளது. இதனால் சமுதாயம் மதத்தை பற்றி விளக்கம் அளிக்கும் வேலையைச் செய்ய வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

pmsamy
டிச 23, 2024 13:08

மதக்குற்றங்களுக்கு பிள்ளையார் சுழி ஆர் எஸ் எஸ் தான்


குமரன்
டிச 23, 2024 11:29

அழிவை நோக்கி எந்த மதமும் அறைகூவல் விடுக்கவில்லை அன்பு அஹிம்சை கருணை காருண்யம் என்று அதன் பரிணாமம் மிக மிக அற்புதமாக இருக்கிறது மாறாக ஒருவன் மதத்தின் பெயரால் கொலை செய்கிறான் அவன் அந்த மதத்தின் கருத்துக்களை ஏற்காமல் அதற்கு விரோதமாக இருக்கிறான் என்று தோன்றுகிறது


அப்பாவி
டிச 23, 2024 08:57

சீக்கிரம் ரிடையராகப் போறாரு. 1950 செப்டம்பரில் பொறந்தாரு. அதான் போகும்போது கொஞ்சம் நல்ல பேரோட போவோம்னுட்டு.


Sampath Kumar
டிச 23, 2024 08:31

மதம் சரியான தமிழ் சொல் வேறு எந்த மொழியிலும் இத்தனை சிறப்புகளை அடக்கிய சொல் இல்லை மதம் ஒருவனுக்கு பிடித்து விட்டால் அவன் பைத்தியத்துக்கு இணை ஆவான் யானைக்கு மதம்பிடிப்பது போல இவரு என்னமோ புதுசா கண்டு பிடித்து சொல்வது போல சொல்கிறார் உங்களுக்கு மதம் பிடித்து வெகுகாலம் ஆச்சு அதன் விளைவாக இந்த நாட்டில் எதனை பிரச்னை உங்க கும்பலுக்கு புரியாதா


Mohan
டிச 23, 2024 09:47

இந்தியாவில் மட்டுமே RSS உள்ளது வேற எங்கயும் இல்ல நாம ஹிந்துக்கள் அமைதியாய் இருப்பதினால் அமைதி இலவுது ஆனா ஏன் உலகம் பூரா அமைதி மார்கம் அட்டகாசம் செய்திட்டு இருகாங்க ..எல்லா நாடுகளுக்கும் அடைக்கலம் தேடி போயி அவுங்க உப்பையே தின்னுட்டு நாங்க பெரும்பான்மை ஆகிவிட்டோம் இனி இது எங்கள் நாடு நீங்க வெளிய போங்க அப்டினு சொல்றனுகளே என்ன இது அநியாயம் ..ஷரியா சட்டம் அனுமதிக்கும் அப்படித்தான.. இதுதாண் ஒண்ட வந்த பிடரி ஊர் பிடரியை விரட்டின கதை ... இருக்க இடம் குடுத்தா படுக்க பாய் கேக்குறது .. பங்களாதேஷ் ல ஹிந்துக்கள் தாக்க படுறாங்களே எதாவது மூச்சு வித்தியா உன்னயத்தான் தேடிட்டு இருந்தேன்,


Mettai* Tamil
டிச 23, 2024 09:59

புரிந்துதான் பேசுகிறார் ..நம் நாடு சுதந்திரம் அடையும் முன்பே எல்லோரும் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும்போது மதம் பிடித்து மதம் சார்ந்த கட்சியான முஸ்லீம் லீக் கை 1906 ல் ஆரம்பித்தது உங்களுக்கு தெரியுமா? பாகிஸ்தானை பிரித்து கொடுத்து மதம் பிடித்து முஸ்லீம் நாடு ன்னு அறிவிக்க வைத்ததும் உங்களுக்கு தெரியுமா இந்துக்களின் புனித கடவுளான ராம ஜென்ம பூமியில், இந்துக்களின் உணர்வுபூர்வமான கோவிலின் மேல் மதம் பிடித்து மசூதியை கட்டியது உங்களுக்கு தெரியுமா? 2002 ல் மதம் பிடித்து, கலவரத்தின் முக்கிய முதல் காரணமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் செய்தது உங்களுக்கு தெரியுமா? 1998 ல் மதம் பிடித்து கோவையில் 58 பேர் சாவுக்கு காரணமான வெடிகுண்டு வெடிக்க செய்தது உங்களுக்கு தெரியுமா? திரும்பவும் அதே கோவையில் மதம் பிடித்து இது சிலிண்டர் விபத்து என்று ஏமாற்றியது உங்களுக்கு தெரியுமா?. மதம் பிடித்து,அந்த தீவிரவாதிகளை கட்டி பிடித்து பாராட்டுவதும் , ஊர்வலமாய் நடத்தி பெருமை சேர்ப்பதும் உங்களுக்கு தெரியுமா?.


அப்பாவி
டிச 23, 2024 07:12

ஆளாளுக்கு மதம்.பிடித்து அலைகிறார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 23, 2024 05:48

சிறுபான்மை மக்கள் மத அடிப்படையில் ஒன்றிணைந்து வாக்களிக்கிறார்கள் ....அவர்களின் மக்கள்தொகையும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது ..... வாழும் நாட்டிற்கு விசுவாசமாக, நன்றியுடன் இருப்பவர்கள் அதில் எத்தனை சதவிகிதம் ???? வரும் காலங்களில் எந்தக்கட்சியினரும் தேர்தல் வெற்றிக்காக சிறுபான்மையினரை தாஜா செய்ய வேண்டியிருக்கும் ..... அந்நிலை வராமல் இருக்க, அதனை ஈடுகட்ட பெரும்பான்மை மக்களின் வாக்குகளை ஒன்றிணைக்க இயலாமல் உள்ளீர்கள் ....


Haja Kuthubdeen
டிச 23, 2024 10:50

நிச்சயமா முஸ்லிம்கள் ஒரே கட்சிக்கெல்லாம் வாக்களிப்பதில்லை.. இந்திய அளவில் எத்தனை கட்சிகள் இருக்கோ அவை அனைத்திலும் கனிசமான முஸ்லிம்கள் உண்டு.. உதாரணமாக நடந்து முடிந்த தஞ்சை தேர்தலில் நாம் தமிழர் சார்பா முஸ்லிம் வேட்பாளர் ஹீமாயூன் கபீர் நின்றார் எங்கள் பகுதியில் சில நூறு ஓட்டுக்கள்தான் பெற்றார்....


AMLA ASOKAN
டிச 22, 2024 23:15

மோகன் பகவத்தின் சமீப கால பேச்சுக்கள் பிஜேபியினரை தவிர அனைவரையும் கவர்ந்துள்ளது . ஏன் இப்படி தீவிர ஹிந்துத்வா கொள்கையிலிருந்து மாறிவிட்டார் , மதச் சார்பின்மையை வலியுறுத்துகிறார் என்று பிஜேபியினர் மண்டையை பிய்த்து கொண்டு குழப்பத்தில் உள்ளனர் . இந்தியாவின் முஸ்லிம் வெறுப்பு மற்ற நாடுகளில் ஹிந்து வெறுப்பாக மாறுவதை புரிந்து கொண்டு விட்டார் . இந்தியாவின் வளர்ச்சிக்கு RSS கொள்கையை காட்டிலும் மத ஒற்றுமை முக்கியம் என்பதையம் உணர்ந்து விட்டார் .


RAMAKRISHNAN NATESAN
டிச 23, 2024 08:33

பாஜகவிடம் ஒரு குழப்பமும் இல்லை.. ஆர்எஸ்எஸ் மாறிவிட்டது என்று சொல்லும் இதே வாய் நாளை என்னவெல்லாம் பேசும் ????


Mettai* Tamil
டிச 23, 2024 10:06

பிஜேபியினர் குழப்பத்தில் இல்லை ..இந்தியாவின் முஸ்லிம் வெறுப்பு எல்லாம் இல்லை . நடந்த மத கலவரத்தை பார்த்தால் எதிர் வினையாகத்தான் இந்துக்கள் செய்திருப்பார்கள் .


kanna
டிச 22, 2024 22:26

காலம் தாழ்ந்த பேச்சு . இதை மதத்தின் பெயரால் வன்முறைகள் மற்றும் அரசியல் ஆரம்பிப்பதற்கு முன் பேசியிருக்க வேண்டும் . இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் .


PARTHASARATHI J S
டிச 23, 2024 06:27

நாட்டில் அமைதி நிலவினால்தான் வளர்ச்சி சாத்தியம். மதங்களைக் கடந்து சிந்தித்தால் தான் அமைதி கிடைக்கும். நமது நாடு மற்ற நாட்டிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ சத்யமும், தர்மமும் நிலை பெறனும். பூர்ண தேசபக்தியினாலேயே மேற்கண்டவை சாத்தியம். இதையே தனது உரையில் அவரது வார்த்தைகளில் உணர்த்துவதாக நான் எடுத்துக் கொள்கிறேன். நாடு தூய்மை அடைந்தால் போதாது. அரசியலும் தூய்மை அடையனும். அல்பங்களை உதறித்தள்ளனும். இதுவே மகாராஷ்டிராவில் நடந்தது. நம்மை விட நாடு பெரியது.


V வைகுண்டேஸ்வரன்
டிச 22, 2024 21:51

நல்ல பேச்சு. அழகா பேசியிருக்கார். எந்த இடத்திலும் ஒரு மதத்தை உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ பேசவில்லை. பாராட்டுக்கள்.


கிஜன்
டிச 22, 2024 21:17

சாமி ...வர வர ரொம்ப நியாயமா பேசுறாப்டி ....அநேகமா இவரை மாத்திடுவாங்க ....


SANKAR
டிச 22, 2024 22:16

no.he will not be touched.it was RSS which was instrumental in winning Haryana and Maharashtra after Amit Shah apologised for his statement during LS election.Shah said ..we do not need RSS to win at that time.RSS is always good genial and full of members who are real deshbakhths


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை