உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தில் சாதுக்கள் மீது தாக்குதல்: மம்தா அரசுக்கு பா.ஜ., கடும் கண்டனம்

மேற்கு வங்கத்தில் சாதுக்கள் மீது தாக்குதல்: மம்தா அரசுக்கு பா.ஜ., கடும் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் சாதுக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் சாதுக்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியது. சாதுக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ., ஆளும் திரிணமுல் காங்கிரசை கடுமையாக சாடியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hee1inqo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பயங்கரவாதிக்கு அரசு பாதுகாப்பு

இது குறித்து பா.ஜ., ஐ.டி., குழு தலைவர் அமித் மால்வியா எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் சாதுக்கள், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய குற்றவாளிகளால் தாக்கப்பட்டனர். மம்தா பானர்ஜியின் ஆட்சியில், ஷாஜஹான் ஷேக் போன்ற பயங்கரவாதிக்கு அரசு பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் சாதுக்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். மேற்கு வங்கத்தில் இந்துவாக இருப்பது குற்றம். இவ்வாறு அந்த பதிவில் அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு

இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் சாதுக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அங்கு சட்டம் ஒழுங்கு நிலைமை என்ன?. விசாரணை அமைப்புகள் அதிகாரிகள் முதல் சாதுக்கள் வரை யாரும் பாதுகாப்பாக இல்லை. இது தான் மேற்குவங்கத்தின் அதிர்ச்சியான நிலை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

mei
ஜன 13, 2024 21:12

இதுவே பாதிரியார், இமாம்கள் என்றால் வரவேற்பர்


Dharmavaan
ஜன 13, 2024 20:49

மம்தா பேகம் அரசை டிஸ்மிஸ் செய்யாமல் மோடி வேடிக்கை பார்ப்பது வெறும் வாய் சவடால் விடுவது கேவலம்


Murugan
ஜன 13, 2024 19:35

சிவன் சொத்து குல நாசம் சிவன் ஆடியர்களும் சிவன் சொத்துதான் மராட்டியத்தில் சில சமூக விரோதிகள் சிவன் ஆட்டியர்களை தகினர்கள் பிறகு என்ன நேரத்து உத்தரம் தாக்ரே அரசு கவிழ்ந்து விட்டது இதே கதிதான் மாம்தா அரசுக்கும் வரும் இதில் எந்த சந்தேகமும் இல்லை


S.kausalya
ஜன 13, 2024 18:35

இதே தான் குஜராத் மாநிலத்திலும் நடந்தது. அங்கு அதற்கு எதிர் வினை ஆற்றிய ஹிந்துக்கள் மா பாதகம் செய்ததாக இன்று வரை சிறுபான்மையின காவலர்கள் சொல்லி திரிகின்றனர். ஆனால் மேற்கு வங்க அரசின் kodungonmaiyin காரணமாக அது குறி்த்து பேசத் கூட மக்கள் அங்கு தயங்குகிறார்கள்.


Seshan Thirumaliruncholai
ஜன 13, 2024 18:23

முஸ்லிம்கள் கிருத்தவர்கள் ராமனை கடவுளாக கருதாவிட்டாலும் இந்த திருநாட்டின் தெய்வமாய் கருதுகிறார்கள். இது அரசியில் இல்லை என்று நன்றாய் அறிவார்கள். இது பி ஜி பி யின் கொண்டாட்டம் இல்லை. மக்களின் விழா. ராமனை வணங்கும் தெய்வம் என்பதால் பிரதமர் என்ற கோதாவில் வரவில்லை. வங்காள மக்களின் வணங்கும் தெய்வம் கல்கத்தா KAALI விழா கொண்டாடினால் மம்தாவிற்கு பெருமை. அவர் கட்சிக்கு இல்லை.


DVRR
ஜன 13, 2024 17:38

முஸ்லிம் பேகம் மும்தாஜ் ஆட்சின்னா அப்படித்தானே இருக்கும்


Anand
ஜன 13, 2024 14:46

கேடுகெட்ட ஆட்சி இங்கேயும் மேற்கு வங்கத்திலும் நடக்கிறது, இவைகளை கலைப்பதே மேல்....


தமிழ்வேள்
ஜன 13, 2024 13:46

மேற்கு வங்கம் உருப்படப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது .....


பொறியாளன் இளங்கோ
ஜன 13, 2024 13:37

பாவத்தை சம்பாதிக்கிறார்கள்!.கொடுமை!!.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ