உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தானியங்கி கருவி எச்சரிக்கை; விபத்தில் இருந்து தப்பிய ரயில்

தானியங்கி கருவி எச்சரிக்கை; விபத்தில் இருந்து தப்பிய ரயில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : உத்தர பிரதேசத்தின் மிர்சாபுரில், தண்டவாளத்தில் உள்ள தானியங்கி கருவி முன்கூட்டியே எச்சரித்ததால், மிகப்பெரிய விபத்தில் இருந்து பயணியர் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது.பீஹாரின் ஜோக்பானியில் இருந்து, டில்லி நோக்கி சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. உத்தர பிரதேசத்தின் மிர்சாபுர் அருகே உள்ள சுனார் ரயில் நிலையத்தை காலை 10:00 மணிக்கு கடந்தது. அப்போது, ரயிலின் எஸ் - 3 பெட்டியின் சக்கரங்களில் அளவுக்கு அதிகமான வெப்பம் இருப்பதை தண்டவாளத்தில் பொருத்தப்பட்டுள்ள, 'ஹாட் ஆக்சல் பாக்ஸ்' கருவி கண்டறிந்து அருகில் உள்ள ஸ்டேஷனுக்கு எச்சரிக்கை அனுப்பியது.இதைத் தொடர்ந்து அடுத்து வந்த ஜக்னா ரயில் நிலையத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து எஸ் - 3 பெட்டி தனியாக பிரிக்கப்பட்டது. அதில் இருந்த பயணியர், வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர்.அதன் பின் பிரயாக்ராஜ் ரயில் நிலையம் வந்தடைந்ததும், புதிய பெட்டி இணைக்கப்பட்டு, எஸ் - 3 பெட்டியில் பயணித்த பயணியர் அதில் பயணத்தை தொடர்ந்தனர். இதனால், அந்த ரயில் ஐந்து மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.ரயில் பெட்டிகளின் பால் பேரிங்கில் கோளாறோ அல்லது வேறு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், பெட்டியின் ஆக்சல் சூடு அதிகரிக்கும். அவ்வாறு சூடு அதிகரிக்கும்போது, ரயில் சக்கரத்தில் அந்த சூடு பிரதிபலிக்கும். இது போன்ற நேரங்களில் ரயில் சக்கரம் திடீரென நின்று விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த ஆக்சல் சூட்டை கண்டறிய, 'ஹாட் ஆக்சல் பாக்ஸ்' என்ற தானியங்கி கருவிகள் தண்டவாளத்தில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. ரயில் இவற்றை கடக்கும் போது, சக்கரத்தில் வெளிப்படும் சூட்டின் அளவை கணக்கிட்டு, ஆபத்தை முன்கூட்டியே எச்சரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

manohar manoj
ஆக 12, 2024 15:44

Indian Railways always Great


ديفيد رافائيل
ஆக 12, 2024 08:11

சூப்பர்... இந்த sensor ஐ உரிய காலத்துல Maintenance பண்ணி வைக்கனும்.


Varadarajan Nagarajan
ஆக 12, 2024 06:52

இதுபோன்ற மேலும் பல பாதுகாப்பு சாதனங்களை அமைத்து போக்குவரத்தை மேலும் பாதுகாப்பானதாக ஆக்கும் ரயில்வே துறையின் முயற்சிக்கு பாராட்டுக்கள். தற்போதைய ரயில்வே அமைச்சரின் செயல்பாட்டுக்கும் பாராட்டுக்கள்.


sankaranarayanan
ஆக 12, 2024 06:00

இது இந்திய ரயில்வேயின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் முன்னேற்றம் வாழக ரயில்வே துறை வளர்க்க ரயில்வே துறையின் முன்னேற்றம்


MUTHU
ஆக 12, 2024 10:06

corana கால விடுமுறையினை இந்தியா ரயில்வே மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டது. சிக்கனல்கள் முற்றிலும் நவீனப்படுத்தப் பட்டுவிட்டது. அதிகமான வளைவுகள் கொண்ட மற்றும் நிலையத்திற்குள் வரும் குறுகலான வளைவுகள் சரி செய்யப்பட்டு விட்டன. இதனால் ரயில்கள் அனைத்தும் கால தாமதமின்றியும் ஸ்பெஷல் ரயில்கள் கூட சரியான நேரத்திற்கும் இயக்கப் படுகின்றன. அனைத்து ரயில் நிலையங்களும் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இதைப்போன்ற பாதுகாப்பு சாதனங்கள் நிறைய பொருத்தப்பட்டுள்ளன.


Amruta Putran
ஆக 12, 2024 05:39

Congratulations to Railway


Kasimani Baskaran
ஆக 12, 2024 05:02

பாதுகாப்பு சாதனங்கள் வேலை செய்ததால் தப்பியது என்றுதான் சொல்ல வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை