உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி கோவில் பாதையில் அலங்கார விளக்குகள் மாயம்: உ.பி., போலீசுக்கு வந்தது தலைவலி

அயோத்தி கோவில் பாதையில் அலங்கார விளக்குகள் மாயம்: உ.பி., போலீசுக்கு வந்தது தலைவலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. கடந்த மே 9ம் தேதிக்கு பிறகு அந்த பாதைகளில் விளக்குகள் காணாமல் போனதாக விசாரணையில் தெரியவந்தாலும், ஆக.,9ல் தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பால ராமர் கோவிலை கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு தரிசனத்திற்காக செல்கின்றனர். இந்த நிலையில் அயோத்தியில் உள்ள ராம மற்றும் பக்தி பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

மே 9ம் தேதியே மிஸ்ஸிங்

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் ராம பாதையில் 6,400 மூங்கில் விளக்குகளும், பக்தி பாதையில் 96 புரொஜெக்டர் விளக்குகளும் நிறுவப்பட்டிருந்தன. கடந்த மே 9ம் தேதி அந்தப் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டபோது சில விளக்குகள் மாயமானது தெரியவந்தது. இதுவரை ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 பிரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இருந்தும், இது தொடர்பாக போலீசார் ஆகஸ்ட் 9ம் தேதி தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருட்டு சம்பவம் தொடர்பாக விளக்குகளை நிறுவிய நிறுவனத்தின் பிரதிநிதி, ராமஜென்மபூமி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. இந்த விவகாரம், அயோத்தி போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. எந்நேரமும் நுாற்றுக்கணக்கான போலீசார் காவல் இருந்தும் எப்படி விளக்குகள் திருடு போயின என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
ஆக 14, 2024 20:09

வழக்கம் போல் இது திராவிட திருடர்கள் வேலை என்று சால்ஜாப்பு சொல்லி திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியது தான்!


subramanian
ஆக 14, 2024 15:01

இது அந்நிய கைக்கூலி வேலை. குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து திருடிய அத்தனை விளக்குகளை கைப்பற்றப்பட வேண்டும்


subramanian
ஆக 14, 2024 14:22

எல்லாம் அந்நிய கைக்கூலி செய்யும் வேலை


Ramesh Sargam
ஆக 14, 2024 13:17

யோகி ஆதித்யநாத்துக்கு வந்தது மிகமிக பெரிய தலைவலி. திருடர்களை காலுக்கு கீழே சுட்டுப்பிடிக்கவேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 14, 2024 10:54

கொள்ளையடிச்சவன் ராம பக்தனா, இல்லையா ????


Swaminathan L
ஆக 14, 2024 10:02

இராமனுக்குப் பிரம்மாண்ட ஆலயம் கட்டியதில் பல பேர் வாழ்வில் விளக்கால் வெளிச்சம் பிறந்துள்ளது போலும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி