உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்

ராமர் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பகலிரவு பாராமல் நடக்கின்றன.கும்பாபிஷேகத்துக்கு இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், அயோத்தியில் கடவுள் ராமர், ஹனுமன் மற்றும் ராமர் கோவிலின் படங்கள் அச்சிடப்பட்ட காவி கொடிகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.இது குறித்து, அயோத்தியில் காவி கொடிகள் உட்பட பூஜை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர் முகேஷ் குமார் கூறியதாவது:அயோத்தியின் பல்வேறு இடங்களில் பூஜைகள் நடத்தப்படுவதால், காவி கொடிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், மற்ற மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் குவிகின்றன. ஒரு நாளைக்கு, 10,000 - 12,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.குறிப்பாக, கடவுள் ராமர், ஹனுமன் மற்றும் ராமர் கோவிலின் படங்கள் அச்சிடப்பட்ட காவி கொடிகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. 50 - 1,000 ரூபாய் வரை என, அளவுக்கேற்ப காவி கொடி கிடைக்கிறது. தற்போது இந்த காவி கொடிகளை வாங்கி, பொது மக்கள் தங்கள் வீடுகளிலும் ஏற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

5 லட்சம் லட்டு

பா.ஜ.,வைச் சேர்ந்த, ம.பி., முதல்வர் மோகன் யாதவ் நேற்று கூறுகையில், ''ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, உஜ்ஜயினில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோவிலில் இருந்து ஐந்து லட்சம் லட்டுகள் அயோத்திக்கு அனுப்பப்படும். கும்பாபிஷேக விழா, ம.பி., முழுதும் கொண்டாடப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Soumya
ஜன 13, 2024 23:42

சோத்துக்கு மதமாறுன பாலைவன அடிமைங்க ஏன் பொங்குறானுங்க


g.s,rajan
ஜன 13, 2024 22:13

இந்தியாவில் உள்ள மக்களை எல்லாப் பிரச்சனைகளிலும் இருந்து அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டி மேலும் மேலும் அதைக் காட்டிக் காட்டி திசை திருப்பியாச்சு,அப்புறம் என்ன ..???


Soumya
ஜன 13, 2024 23:37

ஏன்டா இங்க கட்டுமரத்துக்கு தெரு தெருவா சிலை வைக்க்குறான் பேணா வைக்குறான் அதுக்கு வாய தொறக்க மாட்டியா அடிமையே


g.s,rajan
ஜன 13, 2024 22:09

ராமரும் இனி பணம் காய்ச்சி மரம்தான் ,பணம் இனி அவருக்கும் கொட்டோ கொட்டென்று கொட்டப்போகுது ....


திகழ்ஓவியன்
ஜன 13, 2024 19:26

திறப்பு விழாவாம் அதனால் தான் முருமு அழைக்க பட்டுள்ளார் வருவாரா சந்தேகம் தான்


NALAM VIRUMBI
ஜன 13, 2024 15:17

உண்மை குருவி அன்பரே. எதிர்கட்சிகள் பலவும் பதைபதைப்பில் உள்ளன. அடுத்த லோக் சபா தேர்தலில் அவர்கள் காணாமல் போகும் வாய்ப்பை அவர்களே அமைத்துக் கொண்டார்கள். இறுமாப்பு மற்றும் பொறாமை குணம் கொண்ட அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.


இறைவி
ஜன 13, 2024 13:25

எந்த ஒரு விஷயமும் நாம் பார்க்கும் பார்வையைப் பொறுத்தே அமையும். கடந்த பத்து வருடங்களில் மத்திய அரசு இந்திய கிறிஸ்துவர்களுக்கோ, முஸ்லீம்களுக்கோ எதிராக என்ன செய்தது என்று சொல்ல முடியுமா? இதுவரை எடுக்கப் பட்ட அத்தனை முடிவுகளும் இந்திய மக்கள் நன்மையை உத்தேசித்து மட்டுமே எடுக்கப் பட்டவை. ஒரு மத சார்பற்ற அரசு என்றால் எந்த ஒரு மதத்தை மட்டும் சாராமல் அனைத்து மதத்தையும் சமமாக பாவித்து அரவணைத்துச் செல்வது. அனைத்து மத பண்டிகைகளுக்கும் ஒதுக்காது, விலக்காது எல்லோருக்கும் பொதுவான ஒரு பிரதமராக வாழ்த்து சொல்கிறார்.


Velan Iyengaar
ஜன 13, 2024 09:23

ராமரை பொருளாதாரம் ஈட்டும் உருவகமாக்கி காலம் பல ஆகிவிட்டன இதுபோன்ற காரியத்தை மேலும் மேலும் சிறப்புற செய்வதை சாதனையாக காட்டிக்கொள்ளும் ஈனத்தனத்தை தான் ஏற்கமுடியவில்லை


ஆரூர் ரங்
ஜன 13, 2024 12:51

பொய்யாகக் கட்டமைக்கப்பட்ட யுனஸ்கோ திமுக தான். அது சரியா?


ஆரூர் ரங்
ஜன 13, 2024 14:21

பொருளாதாரத்தை மட்டும்???????? ஏற்றுக்கொள்கிறீர்களல்லவா?


குமரி குருவி
ஜன 13, 2024 07:30

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நெருங்கநெருங்க பல எதிர்க்கட்சிகளுக்குநெஞ்சு அடைக்கிறது..


Velan Iyengaar
ஜன 13, 2024 09:20

அது நியாயமான விஷயமா என்பதை ராமரின் மனத்துக்கே விட்டுவிடுகிறேன் அரசியல் கட்சி மதத்தின் மீது சாய்ந்து தேர்தலை சந்திப்பது தான் ஜனநாயகமா? இதெற்கெல்லாம் ராமர் பாடம் கற்பித்தால் மட்டுமே ராமரின் நீதி வெல்லும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ