உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.400 கோடியில் பிரமாண்ட பஸ் நிலையம்: சுவரெங்கும் மிளிரும் ராமாயண ஓவியங்கள்

ரூ.400 கோடியில் பிரமாண்ட பஸ் நிலையம்: சுவரெங்கும் மிளிரும் ராமாயண ஓவியங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவிழா கோலம் பூண்டுள்ள அயோத்திக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில், 400 கோடி ரூபாய் செலவில், ஒன்பது ஏக்கரில் பிரமாண்ட பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கலையரங்கின் சுவர்கள் முழுதும் ராமாயண காட்சிகளை விளக்கும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

பிரமாண்ட பஸ் நிலையம்

ராமாயணத்தில் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கான தேதி குறிக்கப்பட்டதும், அயோத்தி நகரமே தேவலோகம் போல் ஜொலித்து, திருவிழா கோலம் பூண்டதாக படித்திருப்போம். ராமர் கோவிலுக்கான கும்பாபிஷேக தேதி குறிக்கப்பட்டதிலிருந்து, அயோத்தி நகரம் இப்போதும் அப்படித் தான் காட்சியளிக்கிறது.திரும்பும் திசையெங்கும் காவிக் கொடிகள், பிரமாண்டமான கட்டுமான பணிகள், ஜெய் ஸ்ரீராம் கோஷம் என, மிகப் பெரிய கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது அயோத்தி. அயோத்திக்கான தற்போதைய பஸ் நிலையம், நகரிலிருந்து, 14 கி.மீ., தொலைவில் பைசாபாத் என்ற இடத்தில் உள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பின், நாடு முழுதும் இருந்து பக்தர்கள் அதிகம் வருவர் என்பதால், அயோத்தியிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் லக்னோ - கோரக்பூர் நெடுஞ்சாலை அருகே, 400 கோடி ரூபாய் செலவில், ஒன்பது ஏக்கரில் பிரமாண்ட பஸ் நிலையம் கட்டப்பட்டு, பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. புதுடில்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா, மதுரா, அஜ்மீர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து, மக்கள் எளிதாக அயோத்திக்கு வந்து செல்ல வசதியாக, தொலைநோக்கு பார்வையுடன் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.வெளியூர்களில் இருந்து பஸ்கள் எளிதாக வந்து செல்வதை உறுதி செய்யும் வகையில், இரண்டு அடுக்கு மேம்பாலங்களும் வேகமாக தயாராகி வருகின்றன. கலை அரங்கு, வணிக வளாகம், உணவகங்கள், வங்கி, ஏ.டி.எம்., நவீன கழிப்பறை, மருத்துவ வளாகம், தபால் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், உதவி மையம், பல அடுக்கு வாகன நிறுத்தம் என, உலக தரத்திலான வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.பஸ் நிலையம் மற்றும் கலையரங்கின் சுவர்கள் முழுதும் ராமாயண காட்சிகளை தத்ரூபமாக விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதிலும், ராமர் - சீதா திருமணம் தொடர்பான ஓவியங்கள் கொள்ளை அழகு.

சமீபத்தில் தமிழகத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் குழுவினர் வருகை தந்ததையொட்டி, இங்குள்ள கலையரங்கில், அவர்களுக்காக உத்தர பிரதேசத்தில் பிரபலமான, 'மயில் நடனம்' மற்றும் 'ரங் பெர் ஹோலி' போன்ற நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ராமாயண பாடல்

ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பின், இந்த கலையரங்கில் தினமும் கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் உ.பி., அரசு முடிவு செய்துள்ளது. பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் பஸ்களில் ராமாயணத்தின் பெருமைகளை விளக்கும் பாடல்களை ஒளிபரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த வாரம் அயோத்திக்கு வந்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது, நள்ளிரவில் வந்து பஸ் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அடுத்த சில நாட்களில் அயோத்தி நகரம், உலக வரைபடத்தில் முக்கிய இடம் பெறப் போகிறது என்பதை, இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு நன்றாகவே உணர்த்துகின்றன.

சி.ஆர்.பி.எப்., வீரர்

காசி தமிழ் சங்கமம் குழுவிலிருந்து அயோத்திக்கு வருவோர், எந்தவிதமான நெருக்கடியுமின்றி தரிசனம் செய்வதற்கு பெரிதும் உதவியாக இருப்பவர், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் பாலு. இவர், தமிழகத்தின் திருவாரூரைச் சேர்ந்தவர். தற்போது ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இவருக்கு, தமிழுடன் ஹிந்தியும் நன்றாக பேசத் தெரியும் என்பதால், அயோத்தி மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி, தமிழர்களுக்கு உதவும் பணியில், இவரை சி.ஆர்.பி.எப்., நியமித்துள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

குணசேகரன் திருப்பூர்
ஜன 09, 2024 07:17

சென்னையில் 4500 கோடி பணம் எங்கு போனது ???


திகழ்ஓவியன்
ஜன 09, 2024 08:01

அதை தான் ஒருத்தன் அசிங்கமா கேட்டானே யார் கொடுத்தது அரசா இல்லையே , அப்புறம் நீ என் கெடுக்கிற LOAN கொடுத்த ASIAN BANK கேட்கட்டும் , சரி CAG சொன்ன 76000000000000000000000000000 கோடி பணம் என்கு போனது , ஒரு கிலோமீட்டர் ரோடு போட 290 கோடி யப்பா தங்கத்தில் போட்டார்களா , இதை அறிவித்த CAG OFFICERS கூண்டோடு TRANSFERED , உத்தமர் ஏன் மாற்றானும் அதிகாரிகளை


கதிர் கோவை
ஜன 09, 2024 06:47

நம் நாட்டில் இந்துக்கள் அரசுக்கு கொடுக்கும் வரி பணத்தில் ~~ சிறுபான்மையினர் அரசு சலுகைகள் ஐ அனுபவிக்கின்றனர் ~ இந்துக்கள் வரி பணம் மடை மாற்ற படுகிறது


திகழ்ஓவியன்
ஜன 09, 2024 07:49

இந்த கோயில் கட்ட பல்லாயிரம் கோடி செலவு இதுவும் உங்கள் மக்கள் கட்டிய வரிப்பணம் தானுங்கோ


Raa
ஜன 09, 2024 14:29

திகளுக்கு உலகம் புரியவில்லை, செய்திகளை வாசிப்பதில்லை, பாதி படிப்பு போனற பன்முகத்தன்மையில் உண்டு போல. அயோத்தி கோயிலுக்கு செலவழிப்பது தமிழ் நாட்டைப்போல மக்கள் வரிப்பணம் இல்லை. ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து தனியார் நன்கொடையுடன் நிர்வகிக்கப்பட்டுள்ளது. மக்களே இந்த செய்தி நல்ல காது உள்ளவர்களுக்கு மட்டுமே. சிலரின் பொய்பரப்புரையை நம்பாதீர்கள்.


Ramesh Sargam
ஜன 09, 2024 00:11

தமிழக முதல்வர் இப்பொழுது சமீபத்தில் திறந்து வைத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் போல் 'தரம்' இருக்குமா? கிளாம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில், வெய்யில் காலத்தில் பஸ் நிறுத்தலாம். மழை காலத்தில் போட் (படகு) நிறுத்தலாம். இரவு வேளையில் குடிகாரர்கள், போக்கிரிகளுக்கு அடைக்கலம். இப்படி பல சிறப்புக்களை பெற்றது எங்களுடைய கிளாம்பாக்கம் பஸ் நிலையம். அந்த 'வசதிகள்' உங்கள் அயோத்தி பஸ் வளாகத்தில் உண்டா?


திகழ்ஓவியன்
ஜன 09, 2024 07:31

கண்டிப்பா இருக்காது இது என்ன TN இல் கோயில்கள் போல தெய்வீக கோயில் போல இல்லையே ஏதோ PICNIC ஸ்பாட் போல தான் இருக்கு , இருந்தாலும் நீங்கள் உங்கள் BUS நிலையம் அதை கோயில் உடன் , உங்கள் உயரிய எண்ணம் தெரிகிறது , என்ன கிளம்பாக்கம் அவ்வளவு நன்றாகவா இருக்கு


Raa
ஜன 09, 2024 14:31

ஆமாம், போகாத ஊருக்கு ஒருவர் வழிசொல்கிறார் அவர் பெயர் திகழ். போய் பார்த்துட்டு வந்த மாதிரியே உருட்டு உடை வேண்டியது


g.s,rajan
ஜன 08, 2024 21:50

அந்த ராமர் தான் எல்லா இந்திய மக்களையும் காப்பாத்தணும்.....


Bye Pass
ஜன 08, 2024 22:55

ஆவி இஸ்திரி போடவும் இட்லி வேக வைக்கவும் தானா ? ஒட்டக தேச பரம்பொருள் இங்கே உதவ மாட்டாரா ?


தர்மராஜ் விழுப்புரம்
ஜன 08, 2024 19:58

நாட்டில் பாவாடை குரூப் க்கு அயோத்தி ராமர் கோவில் செய்தி ~ ஏறிச்சல் அதிகம் தரும்


திகழ்ஓவியன்
ஜன 09, 2024 07:50

அது கோயில் மாதிரியே இல்லை ஏதோ PICNIC SPOT போல உள்ளது


Raa
ஜன 09, 2024 14:34

ஆமாம் நாங்க எல்லாம் மஹாபலிபுரம் போனா பீச்சையும் பார்ப்போம், அங்குள்ள ஸ்தலசயன பெருமாள் கோயிலையும் பார்ப்போம் (அதன் வாசலில் தான் பஸ்ஸ்டாண்ட்). திகழ் மாதிரி பீச் மட்டும் பார்த்து வந்துவிட்டு அது பிகினிக் ஸ்பாட் என்று உலர மாட்டோம். சாமியை கல்லாக பார்ப்பவர்களிடம் எதுக்கு வெட்டி பேச்சு


செந்தில் தென்காசி
ஜன 08, 2024 19:51

நாட்டில் உள்ள குல்லா மற்றும் பாவாடை களுக்கு ~ இந்து கோவில் கட்டுவது பிடிக்காது


Raa
ஜன 09, 2024 14:36

நண்பரே, நல்லது நடக்கும் போது நம் சகோதர மதங்களை புண்ணாக்க வேண்டாம். எந்த கோயில் அமைந்ததில் முகமதிய நண்பர்களின் பங்கும் உண்டு என்பதை மறக்க வேண்டாம். தயவுசெய்து Please....


M Ramachandran
ஜன 08, 2024 19:47

அப்போ கிளாம்பாக்க்கம் சுவரெங்கிலும் அது மாதிரி பெரியார் பப்படம் மூ கா படம் எல்லாம் கலர்கள்ரா கருப்பு சிவாப்பாய் ஆய் கருப்பு கலரில் மின்னும் படி சுவர் கண்டயிடம் பினாயில் உஊதி கழுவும் இடம் உள்பட வரைந்தும் மின்விளக்குள் ஏற்றியும் அமர்கள் படுத்திவிடலாம். இதெற்கெல்லாம் அரசு கஜானாவில் நிறைய பணம் இரூக்கு.செலவலிக்க அம்மா குடி அப்பா குடி தான்


sylendra
ஜன 08, 2024 15:06

நாங்கள் கட்டும் வரி பணம், மக்கள் வரி பணம் மக்கள் முன்னேற்றதிற்காக பயன் படுத்தினால், அதாவது கல்வி மற்றும் பொருளாதாரம் முன்னெற்றததிற்காக பயன் பட வேண்டும். அதுவே வளர்ந்த பாரதம்.


Chandhra Mouleeswaran MK
ஜன 08, 2024 20:29

"நாங்கள் கட்டும் வரிப்பணம் மக்கள் வரிப்பணம்" - - - - அட் - ட் - ட் - ட் - டட் - ட -டா மேனி எல்லாம் இரண்டடி உயரத்திற்கு புல்லரிக்கிறது பாலு அண்ணென் அறுத்து வைத்துக் கொள்ளவேண்டும் பண்ணிக் குட்டிக்கு - வந்து - கண்னுக் குட்டிக்கு ஆகும் மக்கள் வரிப்பணம் இந்த நாநூறு கோடிகள் மட்டுமேதானா அண்ணென்? 1947 இல் இருந்து காங்கிரஸ் கமிஷம் மண்டிக் கட்சி கஷ்மிர் முஃப்தி குடும்பத்திற்குள் கொட்டியது, அப்துல்லா குடும்பத்திற்குள் கொட்டியது, நேரு மாம்மா குசும்பத்திற்குள் கொட்டியது, மைமுனா பேகத்தின் குடும்பத்திற்குள் கொட்டியது, ராஜீவ் ரஜஃப் கானின் குடும்பத்திற்குள் கொட்டியது, அண்டோனியா மையா குடும்பத்திற்குள் கொட்டியது, பசிதம்பரம் குடும்பத்திற்குள் கொட்டியது எல்லாம் மக்கள் வரிப்பணம் இல்லையா அண்ணென்? அப்புறம் பைசாவிற்குக்கூட வழியில்லாமல் சென்னைக்கு ரயிலேறி வந்த தட்சிணாமூர்த்தி, அரசியலில் விழுந்து நீந்திப் புரண்டு ஊறி உப்பி இப்போது நான்காம் தலைமுறையான இன்ப நிதி காலத்தில் சுமார் ஆயிரத்து நானூற்று ஐம்பது இலட்சம் கோடி ( சன் குழுமக் கொள்ளை இல்லாமல், தயானிதி மாறன் 2ஜி கொள்ளை இல்லாமல்) அளவிற்குச் சம்பாதித்துக் குவித்து வைத்திருப்பது நீங்கள் சொல்லும் "மக்கள் வரிப் பணம்' இல்லையா அண்ணென்? தத்திகள் இரண்டு பேர் அப்பன் பெயரைச் சொல்லி ஜப்பான் நிறுவனத்தில் இருந்து முப்பதாயிரம் கோடி ரூபாய்களை முப்பதே நாளில் அடித்துப் ப்டுங்கியதைப் பிட்டு வைத்தாரே பீ டீ ஆர் அதுவும் கூட மக்கள் வரிப் பணத்தில் சேராதா அண்ணென்? வாளுக மக்கள் வரிப் பணம் இருங்கள் - - இருங்கள் - - சென்னையில் வடிகால் பணிக்காக என்று சொல்லிச் செலவிட்டு வெள்ளத்தில் மாநகரை மிதந்து ஊற விட்ட நான்காயிரத்து அறுநூற்று எழுபது கோடிகூட மக்கள் வரிப்பணம் இல்லையா அண்ணென்? வாளுக மக்கள் வரிப்பணம்


Raa
ஜன 09, 2024 14:38

Sylendra - - தமிழ் நாட்டைப்போல கோயில் பணம் மடை மாறுவதில்லை உத்திரபிரதேசத்தில். கோயிலை நிர்வகிப்பது, செலவு செய்வது எல்லாமே ஒரு தனியார் காமீட்டீ. மகால் வரிப்பணம் இல்லை. உன் வரிப்பணம் வேண்டுமானால் நன்கொடையாக கொடு.


Balu
ஜன 08, 2024 08:28

நானூரூ கோடி போச்சு ..


Mohan
ஜன 08, 2024 09:42

நாலாயிரம் கொடிய பத்தி கேளுய்யா


vadivelu
ஜன 08, 2024 10:25

அவர் நம்ம ஊர் பஸ் நிலையம் பத்தி சொல்றாரு.


Raa
ஜன 08, 2024 10:27

பாலுவின் அறிவுக்கு எட்டாத ஒரு செய்தி: தமிழ் நாட்டைப்போல கோயில் பணம் மடை மாறுவதில்லை உத்திரபிரதேசத்தில். கோயிலை நிர்வகிப்பது, செலவு செய்வது அரசு இல்லை, அந்த கோயிலின் உண்மையான கமிட்டீ. பாலு, நாகூர், வேலாங்கண்னி எல்லாம் விழாக்காலங்களில் போவதில்லை போலும்.. அங்கெல்லாம் நடக்கக்கூடாது என்று சொல்ல வில்லை. நடக்கணும், அதுதானே பாரம்பர்யம், விழாக்களின் வெளிப்பாடு...


கார்த்திக் கோவை
ஜன 08, 2024 21:34

இந்துகள் கொடுக்கும் வரி பணத்தில் சிறுபான்மையினர் க்கு அரசு சலுகை கொடுப்பதை நிறுத்த வேண்டும்


Kasimani Baskaran
ஜன 08, 2024 05:09

அனைத்துக்கும் முழு முதல் கடவுளான பகவான் அல்லவா... அனைத்துக்கும் தகுதியானவன்.


திகழ்ஓவியன்
ஜன 08, 2024 19:30

என்னதான் கோடி கோடியா கொட்டி ராமர் கோயில் காட்டினாலும் சிங்கி பசங்கள் ராம நவமி அன்று முஸ்லீம் முன்னாள் நின்று jai sri raam / jai sri raam என்று தான் கோசம் போடப்போகிறார்கள்


Bye Pass
ஜன 08, 2024 22:57

அங்கே பிரசாதம் தர்றதில்ல ... சைலென்சர் ரிப்பேரிங் மட்டும் தான் ..


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி