உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோவில் தினமும் ஒரு மணி நேரம் அடைக்கப்படும்

அயோத்தி ராமர் கோவில் தினமும் ஒரு மணி நேரம் அடைக்கப்படும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி : அயோத்தி ராமர் கோவில், தினமும் நண்பகல் நேரத்தில் ஒரு மணி நேரம் அடைக்கப்படும் என, அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டமைக்கப்பட்டு, கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளவும் அனுமதிக்கப் பட்டது.தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த கோவில் வளாகத்தில் மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டு உள்ளனர்.உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தரிசனம் மேற்கொள்ள ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை புரிகின்றனர். பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் வைத்து, தரிசன நேரத்தை காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, கோவில் நிர்வாகம் சமீபத்தில் அதிகரித்தது.இதற்கிடையே, அயோத்தி ராமர் கோவில் தினமும் நண்பகல் 12:30 மணி முதல் 01:30 மணி வரை, ஒரு மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறுகையில், ''அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமருக்கு, 5 வயது தான் ஆகிறது. ''எனவே, அவர் இளைப்பாறுவதற்காக சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. இதை கருத்தில் வைத்து, கோவில் நிர்வாகம் சார்பில் நண்பகலில் ஒரு மணி நேரம் அடைக்க உத்தரவிட்டுஉள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வெகுளி
பிப் 17, 2024 06:45

அடடே இவ்வளவு கூட்டம் வரும்னு தெரிச்சிருந்தா திடலில் திராவிட ராமர் கோவில்ன்னு ஆரம்பிச்சு கல்லா கட்டியிருக்கலாமே...


K.L.ESWARAN
பிப் 17, 2024 06:42

தமிழ்நாட்டில் 17 வயது இளைஞனை காவல்துறை, நீதிமன்றங்கள் " சிறுவன் " என்று குறிப்பிடும்போது 5 வயது ராமரைக் குழந்தை எனக் கூறுவதில் தவறில்லை.


a
பிப் 16, 2024 21:09

Aattu moolai.


Oviya Vijay
பிப் 16, 2024 20:38

"குழந்தை ராமருக்கு 5 வயது தான் ஆகிறது..." என்னாங்கப்பா கலர் கலரா ரீல் வுட்டுகிட்டு இருக்கீங்க...


தத்வமசி
பிப் 17, 2024 10:10

இது சமயம் சார்ந்தது. உன் சட்டங்கள் இங்கே வராது. திராவிட ரீலை தொடர்ந்து பார்க்கவும்.


Indian
பிப் 16, 2024 20:20

தரிசனம் தந்து தந்து களைத்து போய் இருப்பார்.அதனால் ஒரு மணி நேரம் ஓய்வு தேவை தான்


Pandi Muni
பிப் 16, 2024 20:31

உன் மூர்க்க மதத்தை ஏளனம் செய்து சந்தோசப்பட்டுக்கொள். உனக்கு நல்லது.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை