உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே வாரத்தில் வழுக்கை; மஹா., கிராமங்களில் பீதி!

ஒரே வாரத்தில் வழுக்கை; மஹா., கிராமங்களில் பீதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புல்தானா : மஹாராஷ்டிராவில், முடி உதிர்தல் பிரச்னையால் மூன்று கிராமங்களின் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், சிலருக்கு ஒரே வாரத்தில் தலை வழுக்கையானது பீதியை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில், போர்கான், கல்வாட், ஹிங்னா -என்ற மூன்று கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள், கடந்த சில நாட்களாக முடி உதிர்தல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலருக்கு, ஒரே வாரத்தில் தலையில் இருந்த அனைத்து முடிகளும் உதிர்ந்து வழுக்கையானது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளித்தனர். போர்கான், கல்வாட், ஹிங்னா -ஆகிய கிராமங்களுக்கு வந்த சுகாதாரத் துறையினர், கிராம மக்களின் தோல், முடி மற்றும் நிலத்தடி நீரின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். இது குறித்து சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முடி உதிர்தல் பிரச்னையால், மூன்று கிராமங்களில், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். அவர்களின் தோல், முடி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 'உரங்களால் நீரில் மாசு ஏற்பட்டிருக்கலாம். முடி உதிர்தலுக்கு நீர் மாசு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பரிசோதனையில் உண்மையான காரணம் தெரிய வரும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஜன 09, 2025 13:52

தமிழகத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏட்பட்டிருந்தால், தமிழக முதல்வர், அவர் போட்டிருப்பதுபோன்று ஒரு விக், வழுக்கை அடைந்தவர்களுக்கு இலவசமாக வழங்கி இருப்பார்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 09, 2025 13:12

மஹாராஷ்டிரா, புல்தானா மாவட்ட, போர்கான், கல்வாட், ஹிங்னா கிராமங்களில் விரைவில் ஒன்றிய கிளைக் கழகங்கள் துவக்கப்பட்டு முடி இல்லாதோர் அணி துவக்கப்படும். அடுத்து வர இருக்கும் தேர்தலுக்கு அனைவருக்கும் முடி அணி அளிக்க வாக்குறுதிகள் இலவசமாக அளிக்கப்படும்.


SUNDARESAN
ஜன 09, 2025 12:36

எங்கே தலைக்கு தோதுவான விக் கிடைக்கும்னு சொல்வார். ஒன்னும் கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை. முடி தான போச்சு


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 09, 2025 10:26

அந்த ஊரில் அதிக அளவில் மார்பிள் இருக்கிறதா?


Raman
ஜன 09, 2025 09:59

Blood samples could be examined for thallim based metal salts...its toxic and shall induce hairfall in massive amounts.


Palanisamy Sekar
ஜன 09, 2025 09:40

நம்ம தமிழ்நாட்டிலேயே கிடைக்கும். கவலையை விடுங்க. இளைஞனாக நினைக்கும் அளவுக்கு கிடைக்கும். அதனால் முடி போனால் என்ன.. ஆராய்ச்சி செய்து பலனில்லை. இனி தலையிலே வைக்க வேண்டியதை வைக்க விசாரியுங்களேன்.


Kasimani Baskaran
ஜன 09, 2025 07:11

முடி உதிர்வதன் அடிப்படை காரணம் கதிர்வீச்சாகக்கூட இருக்கலாம்.


raja
ஜன 09, 2025 06:15

ஹா ஹா... ஒரு முறை நான் UPSC தேர்வு எழுதும் போது ஒரே நாளில் அனைத்து மக்களும் மொட்டை ஆகிவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி கேட்டார்கள்.. அது தான் நியாபகம் வருகிறது...


நிக்கோல்தாம்சன்
ஜன 09, 2025 05:18

உரங்களாலா அல்லது அங்கிருக்கும் வேறு பேக்டரிகளால ?