உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பகவத்கீதை பாராயண நிகழ்ச்சி: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

 பகவத்கீதை பாராயண நிகழ்ச்சி: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

கொல்கட்டா: மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் உள்ள பிரிகேட் மைதானத்தில், ஹிந்து சாதுக்கள், பெண் சாமியார்கள் உட்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பகவத்கீதை பாராயண நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடந்தது. மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில், பா.ஜ., ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளது.

ஒரே குரல்

இந்நி லையில் பகவத் கீதை ஸ்லோகத்தை ஐந்து லட்சம் பேர் முழங்கும் பாராயணம் நிகழ்ச்சிக்கு, கொல்கட்டாவில் உள்ள பிரபலமான பிரிகேட் பரேட் மைதானத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதை யொட்டி, ஐந்து லட்சம் பேர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் தேவையான மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. சனாதன் சமஸ்கிரிதி சன்சத் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், மேற்கு வங்கம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சாதுக்கள், பெண் சாமியார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பா.ஜ.,வை சேர்ந்த மத்திய இணையமைச்சர் சுகந்தா மஜும்தார், முன்னாள் எம்.பி., லாக்கெட் சட்டர்ஜி மற்றும் துறவியர் சுவாமி பிரதீபானந்த மஹாராஜ், கார்த்திக் மஹாராஜ், திரேந்திர சாஸ்திரி, பாபா ராம் தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள், பகவத் கீதை ஸ்லோகங்களை ஒரே குரலில் வாசித்தனர்.

குற்றச்சாட்டு

இது, நாட்டிலேயே முதல்முறையாக அதிகம் பேர் பங்கேற்ற பாராயண நிகழ்ச்சி என கூறப்படுகிறது. இது, அரசியல் ரீதியாக ப ரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதத்தை பிரிவினைக்கான கருவியாக பா.ஜ., பயன்படுத்துவதாக ஆளும் திரிணமுல் காங்., குற்றஞ் சாட்டியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் 2023ல், ஒரு லட்சம் பேர் பங்கேற்ற பகவத் கீதை பாராயண நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை