உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் பா.ஜ., கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு: லோக் ஜனசக்தி அதிருப்தி

பீஹாரில் பா.ஜ., கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு: லோக் ஜனசக்தி அதிருப்தி

பாட்னா: லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் பீஹாரில் தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. இதில் லோக்ஜனசக்தி கட்சி அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.இக்கூட்டணியில் முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி,ஹிந்துஸ்தான் அவாமிக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ., 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும், லோக்ஜனசக்தி கட்சி 5 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தான் அவாமிக் மோர்ச்சா, மற்றொரு கட்சிக்கு தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுவது என தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தொகுதி பங்கீட்டில் லோக்ஜனசக்தி கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் ராஜினாமா ?

முன்னதாக தங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் லோக்ஜனசக்தி கட்சி அதிருப்தி இருப்பதால் இக்கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் பா.ஜ., மேலிடத்தை சந்தித்து தனது அதிருப்தியை தெரிவிக்க உள்ளதாகவும், இக்கட்சியைச்சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர் பசுபதி குமார் பரஸ், பிரதமர் மோடி அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்து அதிருப்தியை வெளிப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பேசும் தமிழன்
மார் 19, 2024 00:23

பஸ்வான் அவர்கள் சின்ன சின்ன மனஸ்தாபம் இருந்தால் விட்டு தள்ள வேண்டும். தேச விரோத், ஊழல் பேர்வழிகளிடம் இருந்து... நாட்டை காக்க வேண்டும். அதற்க்காக விட்டு கொடுத்தால் நாட்டுக்கு நன்மையே !!!?


abdulrahim
மார் 19, 2024 14:28

தேர்தல் பத்திர மோசடி .....தேசிய ஜனநாயக கூட்டணி ) இருந்து லோக் ஜனசக்தி வெளியேற வேண்டும்.


Anantharaman Srinivasan
மார் 18, 2024 22:21

தொழில் துறை அமைச்சர் பசுபதி குமார் பரஸ், மோடி அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்து அதிருப்தியை வெளிப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராஜினாமா செய். இன்னும் ஒருமாதம் தானே..


venugopal s
மார் 18, 2024 21:29

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை தான் பாஜகவுக்கு பீகாரில் இருக்கிறது போல் உள்ளதே!


தத்வமசி
மார் 19, 2024 10:49

பிகார், மேற்கு வங்கம், ஒரிசா மாநிலங்களில் ஐம்பது சதவிகித இடங்களில் பிஜேபி வெல்கிறது. தமிழகத்தில் காங்கிரசை கழட்டி விட்டால் ஒரு சீட் கூட வெல்லாது.அதனால் எல்லாம் தெரிந்தவர் போல பேச வேண்டாம். அடுத்து தமிழகம் தான். நாற்பதில் இருபது பிஜேபி.


Sck
மார் 18, 2024 21:18

குழப்பாதிங்க பாஸ். பசுபதி பாரஸ், ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரர், சிராக் பாஸ்வானை ஏமாற்றி கட்சியை அபகரிக்க திட்டம் தீட்டினார். பாஜக சரியான பாடம் கொடுத்திருக்கிறது. சிராக்கை அங்கிகரித்து, பூபதி பாரஸை கழற்றி விட்டது.


Priyan Vadanad
மார் 18, 2024 20:07

அய்யனே திரும்பவும் INDIA கூட்டணி பக்கம் மறந்துபோய்க்கூட திரும்பிடாதீங்க. அப்புறம் திரிசங்கு சொர்க்கம்தான். அங்கே இருந்து கெடுத்து குட்டி சுவராக்கிவிட்டு மறுவேலையை பாருங்கள்.


Arul Narayanan
மார் 18, 2024 19:04

பாஜகவிற்கே ஒதுக்கீடு குறைவுதான். கூட்டணி வெற்றியை உறுதி செய்ய இவ்வளவு கீழே இறங்கக் கூடாது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை