உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபாவில் பா.ஜ., எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைந்தது!

ராஜ்யசபாவில் பா.ஜ., எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைந்தது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராஜ்யசபாவில் 4 நியமன எம்.பி.,க்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, பா.ஜ.,வின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 86 ஆக குறைந்தது. தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் எண்ணிக்கை 101 ஆக உள்ளது. இதனால் மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றுவதில் ஆளும் பா.ஜ., அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.ராஜ்யசபாவில் மொத்தம் 245 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதியுள்ள 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். அதில், கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை, சமூக சேவை, பத்திரிகையாளர் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்யும். அதனை ஏற்று ஜனாதிபதி, அந்த பட்டியலில் உள்ளவர்கள் ராஜ்யசபா எம்.பி.,யாக ஒப்புதல் வழங்கி அறிவிப்பார். அவர்கள் ராஜ்யசபா தலைவர் பொறுப்பு வகிக்கும் துணை ஜனாதிபதி முன்னிலையில் எம்.பியாக பதவியேற்பார்கள். பொதுவாக நியமன எம்.பி.,யாக பதவியில் உள்ளவர்கள், மத்திய அரசின் பரிந்துரையில் இருப்பதால், அவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவான போக்கையே கடைபிடிப்பர். அந்த வகையில் தற்போது ராஜ்சபாவில் ஆளும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக 90 எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்களில் 4 பேரின் பதவிக்காலம் கடந்த ஜூலை 13ம் தேதி முடிவடைந்தது. இதனால் பா.ஜ.,வின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 86 ஆக குறைந்துள்ளது.

இண்டியா கூட்டணி

அதேசமயம் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 101 ஆக உள்ளது. ராஜ்யசபாவில் ஏதேனும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அதற்கு பெரும்பான்மை எம்.பி.,க்கள் (குறைந்தது 123 எம்.பி.,க்கள்) ஆதரவு தேவை. அதற்கு தே.ஜ., அல்லது இண்டியா கூட்டணியில் இடம்பெறாத அதிமுக (4), ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் (11), நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் (9) ஆகிய கட்சிகள் யாருக்கு ஆதரவளிக்குமோ அதைப்பொருத்து மசோதா நிறைவேறும். ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சிக்கு 26, திரிணமுல் காங்கிரசுக்கு 13, ஆம்ஆத்மி மற்றும் திமுக.,வுக்கு தலா 10 உள்பட இண்டியா கூட்டணிக்கு மொத்தம் 87 எம்.பி.,க்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

MADHAVAN
ஜூலை 16, 2024 13:38

இனி பிஜேபி கரனுங்க கல்லாட்டம் ஆடமுடியாது


Vijaya Sankar
ஜூலை 16, 2024 00:15

இந்திய கூட்டணி மிக மிக வெற்றி அடையும்


Vijaya Sankar
ஜூலை 16, 2024 00:14

தோல்வி அடையும்


R.Varadarajan
ஜூலை 16, 2024 00:03

நியமன எம்பிக்களுக்கு மசோதாக்கள் மீது மற்றும் நம்பிக்கையில்லாத்தீர்மானங்களின் போது வாக்களிக்க உரிமை உள்ள்தா?


Narayanan Muthu
ஜூலை 15, 2024 21:48

இனிவரும் காலங்களில் இன்னும் சரியும். வரும் மாநில பொது தேர்தல்களில் பிஜேபிக்கு பின்னடைவு ஏற்பட்டால் கேட்கவே வேண்டாம். கடந்த கால பிஜேபியின் மிருக பலத்தால் மக்கள் அனுபவித்த துயரின் வெளிப்பாடு இது.


தாமரை மலர்கிறது
ஜூலை 15, 2024 20:42

நாலு எம்பி குறைந்துவிட்டதால் ஒன்றும் குடிமுழுகி விடாது. பலமுறை அமித் ஷா பல கட்சிகளின் எம்பிகளை உடைத்து பிஜேபியில் இணைத்து காட்டி உள்ளார். ஷிண்டே ஒரு பெரிய உதாரணமாக வழிகாட்டியாக திகழ்கிறார். ரைடுக்கு பயப்படாத அரசியல்வாதிகளே இந்தியாவில் இல்லை. ஏனனில் அனைவரும் ஒண்ணாம் நம்பர் ஊழல்வாதிகள். அரசின் திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என்று மோடிக்கு தெரியும்.


J.Isaac
ஜூலை 15, 2024 22:24

எல்லாமே திருட்டு கூட்டம் தானே


தாமரை மலர்கிறது
ஜூலை 15, 2024 20:12

அதிமுக, ஜெகன், சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக் போன்றோரின் ஓட்டுகள் பிஜேபிக்கு தான். அமித் ஷா ஒரு போன் போட்டாலே போதும், இந்த தலைவர்கள் எல்லோரும் எழுந்துநின்று தான் பேசுவார்கள். அந்தளவிற்கு ரைடு பயம்.


Narayanan Muthu
ஜூலை 15, 2024 21:43

மிரட்டல் அரசியல் ஒருநாள் திருப்பி தாக்கும்.


ديفيد رافائيل
ஜூலை 15, 2024 20:02

எதிர்ப்பு இருக்கனும் அப்ப தான் ஆளுங்கட்சி ஒழுக்கமா இருப்பானுங்க


S George
ஜூலை 15, 2024 19:14

Ok


ARIVALAGAN RAMALINGAM
ஜூலை 15, 2024 19:07

AIADMK Dr K.Edapady K.Palaniswamy and YSR Jagan Mohan Reddy Cong will support to BJP i.e NDA Dr Hon Sri Narendra Modiji Govt World To 3rd in Economy Indian Govt Modiji Govt in the supreme IN Rajiya sabha.INDIANS ALWAYS TO BE PROUD


Narayanan Muthu
ஜூலை 15, 2024 21:45

பிதற்றல் சகிக்கலை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை