உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீசுக்கு பளார்: பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு சிக்கல்

போலீசுக்கு பளார்: பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு சிக்கல்

புனே, மஹாராஷ்டிராவில், அரசு விழா மேடையில் போலீஸ்காரரின் கன்னத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் காம்ப்ளே அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., - சிவசேனா, தேசியவாத காங்., கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புனே சஸ்சூன் அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் திருநங்கையருக்கான பிரத்யேக வார்டு துவங்கப்பட்டது.துணை முதல்வர் அஜித் பவார், மாநில கல்வி அமைச்சர் ஹசன் முஸ்ரிப் ஆகியோர் இந்த வார்டை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் புனே கன்டோன்மென்ட் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் காம்ப்ளேவும் பங்கேற்றார்.அவரது பெயர் நிகழ்ச்சி பேனரிலும், நிகழ்ச்சி நிரலிலும் இடம்பெறவில்லை. இதனால் அவர் நிகழ்ச்சி முடியும் முன் மேடையிலிருந்து இறங்கி சென்றதாக கூறப்படுகிறது.அப்போது இறங்கும் வழியில் நின்றிருந்த போலீஸ்காரர் ஒருவர், அவர் மீது கை வைத்த சமயத்தில், சுனில் காம்ப்ளே கால் இடறி விழச் சென்றார். உடனே ஆத்திரத்தில் அந்த போலீஸ்காரரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால், அந்த போலீஸ்காரர் செய்வதறியாது திகைத்தார். இதன் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பரவியது; இது, எம்.எல்.ஏ.,வுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பேசிய சுனில் காம்ப்ளே, ''யாரையும் நான் அடிக்கவில்லை; வழியை மறித்து நின்றிருந்தவரை தள்ளி விட்டேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAMAKRISHNAN NATESAN
ஜன 07, 2024 09:18

கழகங்கள் அளவுக்கு தரக்குறைவான கட்சியாக பிஜேபியும் ஆகிவிட்டது ...........


Palanisamy T
ஜன 07, 2024 06:44

பாஜக அரசுமீது மக்களுக்கு நம்பிக்கை-யும் மரியாதையும் இருக்கவேண்டியதை உறுதிச் செய்யவேண்டுமென்றால் இவர் மீது மஹாராஸ்ட்டிரா அரசு குற்றவழக்குப் போடுவதை உறுதிச் செய்யவேண்டும். சட்டத்திற்கு மரியாதைக் கொடுங்கள். பாஜக அரசுக்கும் நாட்டிற்கும் இதுதான் நல்லது. நாகரீக நாடுகளான அமெரிக்கா இங்கிலாந்து கொரியா ஜப்பான் போன்ற நாடுகளில் இப்படியொருச் சம்பவம் நடந்துவிட்டால் இதைத்தான்செய்வார்கள்


Ramesh Sargam
ஜன 07, 2024 00:26

இதுபோன்றவர்களை கட்சியில் வைத்திருப்பது கட்சிக்கு ஆபத்து. முதலில் அவரை கட்சியிலிருந்து 'தள்ளிவிட வேண்டும்'.


ravi
ஜன 07, 2024 00:19

கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். மற்ற எம் எல்லேக்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். பதவி வரும்போது நமது மோதிஜி போல் பணிவு இருக்க வேண்டும். இல்லாதவர்களை கட்சியில் இருந்து கடாச வேண்டும்


A Viswanathan
ஜன 07, 2024 08:03

இவர் போன்றவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும்.பொது வாழ்வில் சகிப்பு தன்மை வேண்டும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை