உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் குண்டுவெடிப்பு; நான்கு பேர் பரிதாப பலி

காஷ்மீரில் குண்டுவெடிப்பு; நான்கு பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பழைய இரும்பு கடையில் குண்டு வெடித்ததில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் நகரில் பழைய இரும்பு கடையில் குண்டு வெடித்தது. குண்டு வெடிக்கும் போது, சிலர் லாரியில் இருந்து பழைய பொருட்களை கடையில் இறக்கி வைத்து கொண்டு இருந்தனர். நசீர் அகமது (வயது 40), ஆசிம் அஷ்ரப் மிர் (வயது 20), ஆதில் ரஷித் பட் (வயது 23) மற்றும் முகமது அசார் (வயது 20) ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். பலியானவர்கள் அனைவரும் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஷேர் காலனியில் வசித்து வந்துள்ளனர். மேலும் இருவர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தியது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Krishna Paramathma V
ஜூலை 29, 2024 22:01

எதிர்கட்சிகளின் மோடி எதிர்ப்பால் தீவிரவாதிகளுக்கு ஊக்கம் கிடைத்திருக்கிறது. காரணம் எதிர்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை அதிக அளவில் தேர்ந்தெடுக்க உதவிய நாம் தான் முக்கியமாக தமிழ் நாடு


P. VENKATESH RAJA
ஜூலை 29, 2024 20:14

காஷ்மீரில் அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை