உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லிப்டுக்குள் நாய்: எதிர்த்த சிறுவனுக்கு பளார்

லிப்டுக்குள் நாய்: எதிர்த்த சிறுவனுக்கு பளார்

நொய்டா: 'லிப்டு'க்குள் நாயுடன் சென்றதை எதிர்த்த சிறுவனின் கன்னத்தில் அறைந்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர். தலைநகர் டில்லி அருகில் உள்ள நொய்டா, உ.பி.,யின் கவுதம புத்தா நகர் மாவட்டத்துக்கு உட்பட்டது. இங்குள்ள கிரேட்டர் நொய்டாவின் அடுக்குமாடி குடியிருப்பில், வளர்ப்பு நாயை லிப்டுக்குள் அழைத்துச் சென்ற தகராறில் 8 வயது சிறுவனை, ஒரு பெண் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.இது பற்றி போலீசார் கூறியதாவது: கிரேட்டர் நொய்டாவில் கவுரி சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், 8 வயது சிறுவன், 'டியூஷன்' முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக லிப்டில் ஏறினான். அப்போது, முதல் மாடியில் வசிக்கும் பெண், கயிறு எதுவும் கட்டப்படாத நிலையில், தன் வளர்ப்பு நாயுடன் லிப்டில் ஏறினார்.அதற்கு சிறுவன் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண், சிறுவனை சரமாரியாக அடித்து, லிப்டில் இருந்து வெளியே தள்ளி விட்டார். படிக்கட்டில் அழுது கொண்டிருந்த சிறுவனிடம் அங்குள்ளவர்கள் விசாரித்தபோது, நடந்த சம்பவம் தெரிந்தது.கண்காணிப்பு கேமரா மூலமாக உண்மை தெரிந்ததும், அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.இதற்கிடையே, வளர்ப்பு நாய் பிரச்னையால் அந்த பெண் மீது பல புகார்கள் ஏற்கனவே நிலுவையில் இருந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, அங்குள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நொய்டா, கிரேட்டர் நொய்டா, மத்திய நொய்டா பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள நிலையில், வளர்ப்பு பிராணிகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் குவிவதால் போலீசார் திகைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rajathi Rajan
பிப் 21, 2025 11:46

அவங்க தலைமையும் அப்படித்தான்


Dharmavaan
பிப் 21, 2025 10:04

அவளும் அதே போல் அடிவாங்க வேண்டும்


Nandakumar Naidu.
பிப் 21, 2025 09:46

அந்த பெண்ணை லேசில் விடக்கூடாது. கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.


BALACHANDRAN
பிப் 21, 2025 09:05

நாய் மௌனமாக இருந்தது அந்தப் பெண் நாயாகி விட்டாள்


J.Isaac
பிப் 21, 2025 07:58

நாய் கூட்டம் நாட்டில் பெருத்து விட்டது


Laddoo
பிப் 21, 2025 10:17

பன் பிரெட் பார்ட்டிங்கதானே


Yes your honor
பிப் 21, 2025 10:20

ஆமாம் ஆமாம். யார் அந்த சார்கள் நிறைய பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.


Kasimani Baskaran
பிப் 21, 2025 07:08

அடுக்கு மாடி என்றால் நாய் வளர்க்காமல் இருப்பதுதான் நல்லது. இல்லை என்றால் மற்றவர்கள் நறுமணம் அல்லது நாய் குறைப்பதை பொருட்படுத்தக்கூடாது..


Valli Sabarinathan
பிப் 21, 2025 06:08

Maybe she’s not blessed with children


வாய்மையே வெல்லும்
பிப் 21, 2025 06:08

நான் வசிக்கும் அடுக்குமாடியில் ஒரு வக்கீல் உள்ளார். மிக மிக நல்லவர். பொது விஷயத்தில் யாராவது வாலாட்டினால் தீர்ந்தது கதை. அவரது நடவடிக்கை நேர்மையில் அடங்கி இருக்கும் . அந்தமாதிரி ஒவ்வொரு குடியிருப்பில் நடுவர் இருப்பது மிகமிக அவசியம். இல்லாட்டி எல்லாரும் தான்தோன்றி தனமாக வாழ்வார்கள்.


visu
பிப் 21, 2025 06:07

அடுக்கு மாடி குடியிருப்புகளில் நாய்கள் வளர்ப்பதை தடை செய்யலாம்


நிக்கோல்தாம்சன்
பிப் 21, 2025 05:33

நாயை விட அந்த பெண்ணின் நடத்தை தான் மிக மோசமாக இருக்கிறது


J.Isaac
பிப் 21, 2025 13:00

நாயாடே பழகினால் நாய் புத்தி வரும் அல்லவா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை