திருப்புமுனை ஆண்டு!
நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு, 2024 ஒரு திருப்புமுனை ஆண்டு இங்குள்ள 140 கோடி மக்களும் தேசத்துக்காக போராடியவர்களால் கட்டமைக்கப்பட்ட அரசியல்சாசன அமைப்புகளின் மீது நம்பிக்கை வைத்து தீர்ப்பு வழங்கினர். அதை தொடர்ந்து தக்க வைக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்இன்றும் பயங்கரவாதம்!
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு தான் பயங்கரவாதத்திற்கு காரணம் என பா.ஜ.,வினர் கூறுவர். இன்று சட்டப்பிரிவு 370 அமலில் இல்லை. மத்தியில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஆனால் இன்றும் பயங்கரவாதம் உள்ளது. இதற்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும். பரூக் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாட்டு கட்சிஎன் தலைமையில் கோஹ்லி!
உள்ளூர் அணிக்காக நான் கிரிக்கெட் விளையாடி உள்ளேன். டில்லி அணியில் என் தலைமையில் விராட் கோஹ்லி விளையாடினார். இன்று இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள பலர் என்னுடன் விளையாடியவர்கள் இதை யாரும் பேச மாட்டார்கள். காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து நான் விலகினேன்.தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்