உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் பாலம் "டமால்": மக்கள் அதிர்ச்சி

பீஹாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் பாலம் "டமால்": மக்கள் அதிர்ச்சி

ராஞ்சி: பீஹாரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆர்கா நதியின் இடையே 5.5 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் இன்று (ஜூன் 30) திடீரென இடிந்து விழுந்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிதிக் மாவட்டத்தில் ஆர்கா நதியின் இடையே 5.5 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த பாலம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கனமழையால் ஆர்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளபெருக்கினால் தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

பீஹாரில் இடிந்த பாலம் விபரங்கள் பின்வருமாறு:

இதற்கு முன்னர் அடுத்தடுத்து பீஹாரில் 5 இடங்களில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்த விபரம்:1) ஜூன் 19ம் தேதியன்று அராரியா மாவட்டத்தின் பகாரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. 2) ஜூன் 22ம் தேதியன்று சிவான் மாவட்டத்தில் காங்டாக் கால்வாய் குறுக்கே கட்ட பாலம் இடிந்து விழுந்தது.3) ஜூன்23ம் தேதியன்று கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம் இடிந்து விழுந்தது.4) ஜூன் 26ம் தேதி கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் கங்கை நதியை மஹாநந்தா நதியுடன் இணைக்கும் துணை நதியான மடியாவின் குறுக்கே, 70 மீட்டர் நீளத்துக்கு பாலம் இடிந்து விழுந்தது.5) ஜூன் 28ம் தேதி மதுபானி மாவட்டத்தில் மாதேபூர் என்ற பகுதியில் முக்கிய ஆற்றின் குறுக்கே பாலம் இடிந்து விழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 01, 2024 09:24

தமிழகம் இந்த அளவுக்கு மோசமாகவில்லை.....ஊ ஊ பீயி ஸ் பெருமிதம் .......


Priyan Vadanad
ஜூலை 01, 2024 02:05

உண்மையில் இந்த ஆளை கிறுக்கன் என்று திட்டவேண்டும்போல இருக்கிறது.


sankaranarayanan
ஜூன் 30, 2024 21:15

சோழ மன்னர் கரிகாலன் கட்டிய கல்லணை - ஆங்கிலேயர் கட்டிய மேட்டூர் இன்னும் பல அணைகள் ஆண்டுகள் கடந்தும் இன்னுமும் கம்பிரமாக நின்று மக்களுக்கு சேவை புரிகின்றன ஆனால் இப்போது கட்டிய அணைகள் கட்டி திரும்பிய உடனே உடைகின்றன இவைகளுக்கு யார் காரணம் என்று யாராவது ஆராய்ச்சி செய்தது உண்டா? மக்கள் பணம் மண்ணிலே . எப்போதுதான் இவைகளுக்கு விடிமோட்சம் கிடைக்கும்


Ethiraj
ஜூலை 01, 2024 10:43

Every one rupee only 85 paisa goes to bridge Politician ,public servant ,contractor trio knows how to swallow it


krishnan
ஜூன் 30, 2024 18:21

all local contractors be discouraged.


Svs Yaadum oore
ஜூன் 30, 2024 17:52

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெறும் பாலம்தான் உடைந்தது .....தமிழ் நாட்டில் அணையின் மதகு கூட உடையும் ..2022 ஆம் ஆண்டு பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால் நீர் வீணாக வெளியேறியது ....அணையின் மூன்று மதகுகளில் நடுவில் உள்ள மதகின் சங்கிலி அறுந்து துாணுடன் உடைந்து விழுந்தது.உடைந்த மதகு வழியாகவும் மற்ற இரண்டு மதகுகள் வழியாக அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வெளியேறி வீணாக அரபி கடலுக்கு சென்றது....பரம்பிக்குளம் அணையில் மதகு உடைப்பு ஏற்பட்ட இடத்தை, தமிழக நீர் வளத்துறை அமைச்சர் பார்வையிட்டாராம் .....


Priyan Vadanad
ஜூலை 01, 2024 02:08

வெட்கமாயில்லையா உங்களுக்கு என்று கேட்கமாட்டேன். உங்கள் கருத்தை வாசித்தபிறகு அத்தனை கோபம் வருகிறது.


Apposthalan samlin
ஜூன் 30, 2024 17:52

பாலம் கட்டுவதில் ஊழல் இதை சொன்னால் தேச விரோதி என்பார்கள் நமக்கு ஏன் வம்பு


Saai Sundharamurthy AVK
ஜூன் 30, 2024 17:46

ஊழல் எம்.எல்.ஏ, ஊழல் லோக்கல் 5000 வோட்டு உறுப்பினர், ஊழல் எம்.பி எல்லாம் எடுக்கும் காண்ட்ராக்ட் எல்லாம் அப்படித் தான் இருக்கும். தொழில் நுட்பம் தெரியாதவர்கள். ஒரு சாக்கடை காட்டினால் கூட இவ்வளவு தூரத்திற்கு இவ்வளவு சரிவு இருக்க வேண்டும் என்று கணக்கு உள்ளது. அப்போது தான் தண்ணீர் நிற்காமல் ஓடும். ஒரே மட்டமாக போட்டு விட்டு போய் விடுவார்கள். தண்ணீர் ஆங்காங்கே நின்று குப்பைகளையும் சேர்த்துக் கொண்டு விடும். அவர்கள் எல்லோரும் கொத்தனார், மேஸ்திரி ஆலோசனைப் படி தான் பணியை மேற்கொள்வார்கள். பொறியியலாரின் ஆலோசனைகளை கடைப்பிடிப்பதில்லை. பாலம் என்பது புவி அமைப்பையும், தண்ணீரின் வேகத்தையும் பற்றி சரியாக கணித்து அதற்கு எப்படி எந்த அளவில் அஸ்திவாரம் போட வேண்டும் என்று கணக்கு உள்ளது. அரசியல்வாதிகள் காண்ட்ராக்ட் எடுத்து கமிசனைப் பெற்றுக் கொண்டு பொறியியல் கண்ட்ராக்டர்களுக்கு வேலையை சப் காண்ட்ராக்ட் அக கொடுக்கிறார்கள். அது நிச்சயம் வேலைக்கு ஆகாது. ஏனெனில், இந்தியாவில் ஊழலில் மலிந்த அரசியல்வாதிகள் தான் அதிகம். வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் அரசியல்வாதிகளும் சரி, அதிகாரிகளும் சரி, யாரும் ஊழல் செய்வதில்லை. ஏஏனெனில் தங்கள் ஊர் அழகாக இருக்க வேண்டும். அழகாக பராமரிக்க வேண்டும் என்கிற எண்ணம் தான் அவர்களுக்குள் இருக்கும். அதற்காகவே சிறந்த ஆலோசனை தரும் நேர்மையான தொழிநுட்ப வல்லுனர்களுக்கே நேரடியாக காண்ட்ராக்ட் கொடுக்கிறார்கள்.


Velan
ஜூன் 30, 2024 17:23

எஞ்சினியர்கள் நல்ல திறமைசாலி போல


A good
ஜூன் 30, 2024 21:27

5.5கோடியில் .5 குடிக்கு பாலம் கட்டினால் இப்படி தான் விழும்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ