உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு கட்டடம் இடிந்து விபத்து: பலி 5 ஆக உயர்வு

பெங்களூரு கட்டடம் இடிந்து விபத்து: பலி 5 ஆக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூருவில் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளான இடத்தில், 14 மணி நேரத்திற்கும் மேலாக, விடிய விடிய மீட்பு பணி நடந்து வருகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.பெங்களூரு கே.ஆர்.புரம் தொகுதிக்கு உட்பட்ட பாபுசாப்பாளையாவில் நேற்று மாலை கனமழை பெய்தது. புதிதாக கட்டப்பட்டு வந்த ஆறு மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுக்குள் சிக்கியிருந்த ஒரு தொழிலாளி, தலையில் பலத்த காயத்துடன் வெளியே வந்தார். கட்டடத்தில் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக கூறினார்.தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து வந்தனர். மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். ஆனாலும் கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி, மூன்று பேர் இறந்தனர். இரவு முழுவதும், தொடர்ந்து 14 மணி நேரமாக மீட்பு பணி நடந்த நிலையில், மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டது. இதனையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
அக் 23, 2024 18:43

குளங்களைத் தூர்த்து மாடி மேல் மாடியாகக் கட்டினால் ஆதிவாரம் எப்படித் தாங்கும்? இங்கு மட்டும் என்ன? 11 மாடிக்கட்டிடம் இடிந்து 61 பலி வாங்கிய கதை நடக்க வில்லையா ? சும்மா, ஒரு என்ஜினீரையோ, மேஸ்திரியையோ கைது செய்வார்கள் அவ்வளவுதான் எல்லா மாநிலமும் இதில் ஒன்றுதான்


என்றும் இந்தியன்
அக் 23, 2024 16:31

புதிதாக கட்டப்பட்டு வந்த????அப்போ டிசைன் தவறு உபயோகப்படுத்தப்பட்ட material தரக்குறைவானது என்று இதனால் prove ஆகியது / அழுகியது. ஓகே இதற்குப்பின் என்ன நடக்கும் ஒன்றும் நடக்காது???


Ramesh Sargam
அக் 23, 2024 13:07

அந்த கட்டடத்தை கட்டுபவன் ஒரு அரசியல் செல்வாக்கு உள்ள ஒரு நபர் என்று செய்தி. இதுவரை அவன் போலீசால் கைதுசெய்யப்பட்டானா, வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்கிற செய்தியே இல்லை. அவன் இந்நேரம் தப்பித்து யாராவது ஒரு அரசியல்வாதியிடம் தஞ்சம் அடைந்திருப்பான்.


veeramani
அக் 23, 2024 08:48

ஐ டி நகரான பெங்களுருவில் பெய்த நல்ல மழையினால் கட்டடம் இழுத்துச்செல்லப்பட்டது . உலகில் மழையை கொடுக்கும் கடவுள், அதை சேமித்துவைக்க திராணி இல்லாத மனிதர்கள், கடவுளை குறை சொல்லுகிறார்கள் . ஒரு துளி மழை ராய் செயற்கையாக உற்பத்தி எய்ய சுமார் நூற்று பத்து ரூபாய் தேவைப்படலாம் . மக்களே சுமார் பத்து டி எம் சி தண்ணீரை பெங்களூரு மக்கள் வீணடித்து உள்ளனர் கட்டடம் தண்ணீரின் பாதையில் இருந்திருக்கலாம் அல்லது அஸ்திவாரம் டெச்ணிகளாக சரியான முறையில் அமைக்காமல் இருந்திருக்கலாம். மக்களே.. உங்களது உயிரின் விலை மதிப்பு நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் . கன்டராக்டர்கள் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் இவர்களை பொது இடங்களில் வைத்து தண்டிக்கவேண்டும் எப்படியோ பாதிப்பு சில உயிர்கள்தான் என அரசும் மற்றவர்களும் குறிக்கொள்ளலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை