உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனிமேல் தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு

இனிமேல் தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை நடத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப் போன்ற மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை நடத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படை காவலர் பணிக்கான தேர்வு வரும் பிப்.,20ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 48 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். நாட்டின் 128 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இனிமேல் தமிழ், அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, கொங்கனி ஆகிய பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை