உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்த கார்: 10 பேர் பலி

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்த கார்: 10 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பிரான்ஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட குவாடலூப் பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. அப்போது கூட்டத்திற்குள் கார் அதிவேகமாக புகுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.விபத்துக்கான காரணம் தற்போது தெரியவில்லை, மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. காரை இயக்கிய டிரைவர் குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை. விபத்துக்கு காரில் ஏதும் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டதா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது. இந்த விபத்து திட்டமிட்டு நிகழ்ந்தப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு, கிழக்கு ஜெர்மனியின் மாக்ட்பர்க் நகரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு , கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்பனை சந்தையில் ஒரு கார் மோதியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 68 பேர் காயமடைந்தனர். தற்போது இந்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட, கூட்டத்திற்குள் கார் புகுந்து 10 உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Modisha
டிச 06, 2025 09:49

இதுங்களை இந்த உலகத்தில் நடமாடவே விடக்கூடாது . மனிதகுல விரோத அமைதி ….


Senthoora
டிச 06, 2025 09:47

ஒவ்வொரு வருடமும் உயிர்ப்பலியுடன்தான் பிரான்ஸ்இல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பிக்கும்.


oviya vijay
டிச 06, 2025 09:44

ஓ நேற்று வெள்ளிகிழமை.. அதான்


Yaro Oruvan
டிச 06, 2025 09:43

ஐரோப்பாவை அமைதி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க தொடங்கிவிட்டது ... உஷாரய்யா உஷாரு.. அகதிகள்னு வர்றானுவ வந்து கும்பலா சேந்து புத்திய காட்றானுவ.. மாறாதய்யா மாறாது மணமும் குணமும் மாறாது.. பொறப்புல கோளாறு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை