உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்கு: டில்லி கவர்னர் ஒப்புதல்

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்கு: டில்லி கவர்னர் ஒப்புதல்

புதுடில்லி: 14 ஆண்டுகளுக்கு முன் பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் பேசிய சர்ச்சை பேச்சு தொடர்பாக வழக்கு தொடர டில்லி துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.பிரபல எழுத்தாளர் அருந்ததிராய், சமூக ஆர்வலராகவும் உள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு டில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில், காஷ்மீர் விவகாரம் மற்றும் மாவோயிஸ்டு ஆதரவு நிலைப்பாட்டுடன் பேசினார். இவரது பேச்சு தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அருந்ததிராய், பேராசிரியர் சவுகத் ஹூசைன் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர்., பதியப்பட்டு டில்லி மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில் இந்த வழக்கினை யு.ஏ.பி.ஏ., எனப்படும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் வழக்கு தொடர டில்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

GMM
ஜூன் 15, 2024 06:20

சட்ட விரோத தடுப்பு சட்டம் கீழ் கவர்னர் போன்ற முக்கிய அரசியல் சாசன பதவி எடுக்கும் முடிவில் வழக்கறிஞர்கள் வாதம் ஏற்று, நீதிமன்றம் குறுக்கிடுவது முறையல்ல. கவர்னர் முடிவை உடன் ஏற்க வேண்டும். தேச பாதுகாப்பு தொடர்பானது என்பதால், வழக்கு விசாரணை மற்றும் தண்டனையை விரைவு படுத்த வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜூன் 15, 2024 01:25

அருந்ததி ராய் ஒரு பிரிவினைவாதி. தீவிரவாதியை ஆதரிக்கும் எழுத்தாளர். உள்ளே போடுவது சட்டஒழுங்கை பாதுகாக்கும்.


Jysenn
ஜூன் 14, 2024 23:19

She is a spitting cobra which will endanger the integrity of India. It is a good development but the notorious SC will let this anti-national scot free. So this sanction for prosecution will be bulldozed by the left-leaning apex court that will make a midnight scramble to let her off the hook.


kantharvan
ஜூன் 14, 2024 21:29

பயம் பயம் .. இன்றே ஜெயம்.


Bala Paddy
ஜூன் 14, 2024 21:27

சீனாவுக்கு இல்லேன்னா பாகிஸ்தானுக்கு நாடு கடத்திடலாம். அங்க இப்படி பேசட்டும்.


M Ramachandran
ஜூன் 14, 2024 20:34

இதற்கு தான் ராகுல் தலைமயில் காங்கரஸ் அரசு அமைய வேண்டும் என்று நிறைய பேர் எதிர் பார்த்தார்கள். இது வரை தூங்கின கிசுக்கள் தூசி தட்ட படமாட்டாது என்று.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை