உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவில் அமித்ஷா மீது வழக்குப்பதிவு

தெலுங்கானாவில் அமித்ஷா மீது வழக்குப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது, காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தெலுங்கானாவில் 17 தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதனால், காங்கிரஸ், பா.ஜ., பிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் சார்பில் ராகுல், கார்கேவும், பாஜ., சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் மே 1ம் தேதி தெலுங்கானாவில் நடந்த ‛ரோடு ஷோ'வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இந்தப் பேரணியின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், குழந்தைகளை பங்கெடுக்க வைத்ததாகவும் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் புகார் அளித்தது. இதன் அடிப்படையில் அமித்ஷா உள்ளிட்ட 5 பேர் மீது தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

துரைநாயுடு
மே 04, 2024 19:18

ஜெயுச்சா பெயிலு. தோத்தா ஜெயிலு.


NALAM VIRUMBI
மே 04, 2024 14:04

திராவிட கொள்கையில் பிடிப்பு உள்ளவருக்கு தான் அஷ்டமத்து சனி ஜூன் இரண்டாவது வாரம் முதல் தொடங்கப் போகிறது


Lion Drsekar
மே 04, 2024 13:17

இவர்கள் இப்படியே நாட்டை நடத்தி சென்றால் நாளை நாம் ஒவ்வொரு முடியாட்சியின் கீழ் ஆளப்படும் அவர்கள் நாட்டுக்குள் செல்வதற்கோ அல்லது தங்குவதற்க்கோ விசா வாங்கவேண்டிய நிலை உருவாகும் வந்தே மாதரம்


மோகனசுந்தரம்
மே 04, 2024 12:22

இந்த காங்கிரஸ்காரங்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய குற்றச்சாட்டு இல்லை என்று தெரியவில்லையா. என்ன ஒரு வழக்கு பதிவு.


Ramanujadasan
மே 04, 2024 11:37

சரி தான் மோடி மீண்டும் பிரதமராக ஜூன் மாசம் வந்த பிறகு ஆறே மாதத்தில் தெலுங்கானாவில் ஆட்சி மாற்றம் உறுதி


MADHAVAN
மே 04, 2024 11:33

பிஜேபி கட்சில இருக்குற யாரும் அவுங்க மகனுக்கு மக்களுக்கு எலக்சன் ல சீட் தரலயா ? இல்ல அதுஎல்லாம் அவர்கள் வாரிசு இல்லையா ?


MADHAVAN
மே 04, 2024 11:30

ஜெய் ஷா என்பது இவர் மகன்தான், இது வாரிசு அரசியல் இல்லயா ?


Rajathi Rajan
மே 04, 2024 11:28

அமித்க்கு அஷ்டமத்து சனி ஆரம்பம் அகி விட்டது


RAAJ68
மே 04, 2024 11:18

விடியல் ஆட்சியை காப்பியடிக்கும் தெலுங்கானா . .இங்கு மோதிமீது புகார் கொடுத்தனர் ஆனால் அதை போலீஸ்கர் நிராகரித்து விட்டார்


மேலும் செய்திகள்