மேலும் செய்திகள்
தேசிய நலன் மீதான பற்றால் உச்சத்தை தொட்டவர் பிரதமர் மோடி; அமித் ஷா
6 hour(s) ago | 6
இளம்பெண் தற்கொலை முயற்சி
8 hour(s) ago
பெங்களூரு : ''நல்ல அரசியல்வாதியாக வருவதற்கு அரசியல் பயிற்சி மையம் துவங்கும் எண்ணம் உள்ளது,'' என, சபாநாயகர் காதர் தெரிவித்தார்.பெங்களூரு விகாஸ் சவுதாவில் நடந்த சட்டக்கல்லுாரி மாணவர்களுக்காக நடந்த மாநில அளவிலான மாதிரி சட்டசபை அமர்வு போட்டி நிறைவு விழா நேற்று நடந்தது.சபாநாயகர் காதர் பேசியதாவது:ஒவ்வொரு துறையிலும் படிக்க கல்லுாரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளன. அது போல, நல்ல அரசியல்வாதியாக வருவதற்கு, வருங்காலத்தில் 'அரசியல் பயிற்சி மையம்' துவங்கும் எண்ணம் உள்ளது.வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல துறையினருக்கு கல்லுாரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் நல்ல அரசியல்வாதியாக மாறுவதற்கு நிறுவனங்கள் இல்லை. இதன் பின்னணியில் அரசியல் பயிற்சி மையம் துவங்கப்படும்.சமுதாயத்தை மேம்படுத்தும் நல்ல அரசியல்வாதியை தேர்ந்தெடுப்பதில் ஓட்டுக்கு மதிப்பு உண்டு. இதன் பின்னணியில், ஓட்டு போடுவதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் ஓட்டுரிமையை அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ளது. இருப்பினும், பணக்காரர்களை விட ஏழைகள் அதிகம் ஓட்டுப்போடுகின்றனர். படித்தவர்கள் ஓட்டு போடாதது வருத்தம் அளிக்கிறது.ஓட்டு போடுவதன் மதிப்பை உணர்ந்து, இளைஞர்கள் தங்கள் உரிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி பங்கேற்றார்.சட்ட கல்லுாரி மாணவர்களுக்காக நடந்த மாநில அளவிலான மாதிரி சட்டசபை அமர்வு போட்டி நிறைவு விழாவில், மாணவர்களுக்கு சபாநாயகர் காதர், மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
6 hour(s) ago | 6
8 hour(s) ago