உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சந்திரபாபு நாயுடு , அமித்ஷா சந்திப்பு: பா.ஜ. கூட்டணியில் தெலுங்கு தேசம்

சந்திரபாபு நாயுடு , அமித்ஷா சந்திப்பு: பா.ஜ. கூட்டணியில் தெலுங்கு தேசம்

புதுடில்லி: ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன் மூலம் பா.ஜ., கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற லோக்சபா தேர்தல் தேதி விரைவில் வெளியாக உள்ளது.இந்நிலையில் ஆந்திரா மாநில சட்டசபைக்கும், பாராளுமன்ற லோக்சபாவிற்கும் சேர்ந்தே தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆந்திராவில் பிரதான எதிர்கட்சியான தெலுங்கு தேசம் பா.ஜ.,வில் இணையப்போவதாக செய்திகள் வெளியாயின.இதை உறுதி செய்யும் வகையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். முன்னதாக மற்றொரு கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும், பா.ஜ., கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை