உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை விழுங்கியவர் பலி! உயிர் பிழைத்தது கோழிக்குஞ்சு!

குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை விழுங்கியவர் பலி! உயிர் பிழைத்தது கோழிக்குஞ்சு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை உயிருடன் விழுங்கியவர் உயிரிழந்தார். அவர் விழுங்கிய கோழிக்குஞ்சு, தப்பிப் பிழைத்தது.இது பற்றிய விவரம் வருமாறு; சத்தீஸ்கர் மாநிலம் சிந்த்காலோ என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆனந்த் யாதவ். 35 வயதான அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. மந்திர, தந்திரங்களில் அதீத நம்பிக்கை கொண்டவர். தந்தையாக வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஏதேனும் பரிகாரங்களை செய்து வந்துள்ளார்.இந் நிலையில் சம்பவத்தன்று, குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆனந்த் யாதவ் திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து,சடலம் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டது.சடலத்தை உடற்கூராய்வு செய்தபோது ஆனந்த் யாதவ் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம் நிகழ்ந்தது. அவரது தொண்டையில் உயிருடன் ஒரு கோழிக்குஞ்சு சிக்கியிருப்பதை கண்டு அதை மீட்டனர்.தொடர் விசாரணையில், மந்திர, தந்திரங்கள் மீது அதிகப்படியான நம்பிக்கை கொண்ட ஆனந்த் யாதவ், தந்தையாக வேண்டி சில சடங்குகளை செய்து வந்ததாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக உயிருடன் உள்ள கோழிக்குஞ்சை விழுங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று உள்ளூரில் உள்ள ஜோசியர் ஒருவர் கூறியதை நம்பி இருக்கிறார். அதை உண்மை என்று நம்பிய அவர், கோழிக்குஞ்சு ஒன்றை உயிருடன் விழுங்கி உள்ளார். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். உடற்கூராய்வு செய்த மருத்துவர் சாந்து பாக் கூறியதாவது; என் வாழ்நாள் பணி அனுபவத்தில் இதுபோன்றதொரு சம்பவத்தை நான் கண்டது இல்லை. உயிரிழந்த ஆனந்த் யாதவ் தொண்டையில் 20 செ.மீ., நீளம் கொண்ட கோழிக்குஞ்சை எடுத்தேன். இந்த கோழிக்குஞ்சு உயிருடன் இருக்கிறது. தொண்டைக்குழியில் சிக்கிய கோழிக்குஞ்சால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரை இழந்துள்ளார். கிட்டத்தட்ட 15,000க்கும் மேற்பட்ட உடற்கூராய்வு செய்த நான் இதுபோன்ற ஒரு அனுபவத்தை கண்டதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

நிக்கோல்தாம்சன்
டிச 17, 2024 21:17

அந்த ஜோஸ்யக்காரனை கோயமுத்தூர் அழைத்து வந்து மர்ம நபர்களிடம் ஒப்படைத்து விடுங்க...


KayD
டிச 17, 2024 17:06

கோழி குஞ்சு கு பதில்


Ramesh Sargam
டிச 17, 2024 17:01

நான் எப்பொழுதும் ஜோசியர்களை நம்புவதில்லை.


என்றும் இந்தியன்
டிச 17, 2024 16:56

ஹைதராபதில் மீன்குஞ்சை மாத்திரையுடன் விழுங்குவார்கள், அதற்கு கூட்டம் பார்க்கணுமே. அதை நினைத்து இதை செய்தால் பின் மரணம் தான் நிகழும்


அப்பாவி
டிச 17, 2024 15:09

தலையில் மூளையில்லை... அதுக்கு கீழே போகவாணாம்னு பாக்கறேன்.


Krishnamurthy Venkatesan
டிச 17, 2024 14:08

மருத்துவரை பார்க்காமல் வேறு யாரையோ பார்த்ததன் விளைவு. புத்தி வேலை செய்யவில்லை இந்த ஆளுக்கு. அவ்வளவுதான்.


Palanisamy Sekar
டிச 17, 2024 13:44

மலை முழுங்கி மஹாதேவன்கள் இன்னமும் மலைகளை விழுங்கி உயிரோடு இருக்கும்பது வெறும் கோழிக்குஞ்சு விழுங்கியவருக்கு இந்த கதியா? ஐயோ பாவமே


Padmasridharan
டிச 17, 2024 13:11

இறப்பு செய்தியில், நகைச்சுவை தலைப்பு கொடுப்பதை தவிர்க்கவும் ?? ".....உயிர் பிழைத்தது கோழிக்குஞ்சு"


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 17, 2024 11:59

இப்போ முதலுக்கே மோசமாயிட்டு ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை