உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமத்துவமின்மை அகற்றப்பட வேண்டும் முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல்

சமத்துவமின்மை அகற்றப்பட வேண்டும் முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல்

பெங்களூரு: ''அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட்டால் நாம் அனைவரும் பிழைப்போம். இல்லாவிட்டால் ஆபத்தில் சிக்குவோம். நாட்டில் சமத்துவமின்மை அகற்றப்பட வேண்டும்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.கர்நாடக சமூக நலத்துறை சார்பில், இரண்டு நாட்களுக்கான அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு மாநாடு, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மாநாட்டை துவக்கிவைத்து, முதல்வர் சித்தராமையா பேசியதாவது:அரசியல் சாசனம் தலித்களின் முன்னேற்றத்துக்கானது என்றும், அது சமூக-பொருளாதார சூழலுக்கு ஏற்ப இல்லை என்றும் அவதுாறு பரப்பப்படுகிறது. இதை யாரும் ஏற்று கொள்ளக் கூடாது.அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட்டால் நாம் அனைவரும் பிழைப்போம். இல்லாவிட்டால் ஆபத்தில் சிக்குவோம். நாட்டில் சமத்துவமின்மை அகற்றப்பட வேண்டும்.சமூக சமத்துவமின்மையை ஒழிப்பது ஒவ்வொரு அரசின் பொறுப்பாகும்.அரசியலமைப்பு, சமத்துவம், மனித சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு ஆதரவாக இருப்பவர்கள் கையில் இருந்தால் அரசியல் சாசனம் வெற்றி பெறும்.அரசியல் சட்டத்திற்கு எதிரானவர்கள் கையில் இருந்தால் நமக்கு எதிர்காலம் இல்லை. அரசியலமைப்பின் விருப்பங்களை நிறைவேற்ற, அரசியலமைப்பிற்கு ஆதரவானவர்களின் கைகளில் அதிகாரம் இருக்க வேண்டும்.அரசியல் சாசனத்தின் முக்கியத்துவம் குறித்து, மாநில மக்களுக்கு விளக்கும் வகையில், கடந்த ஜனவரி 26ம் தேதி முதல், அரசியலமைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.இதே வேளையில், சிறப்பான முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய துமகூரு, தாவணகெரே, மைசூரு, குடகு, பல்லாரி மாவட்டங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோபாலகவுடா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ