உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛இண்டியாகூட்டணியில் மோதல்: பிரதமர் மோடி

‛இண்டியாகூட்டணியில் மோதல்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛தேர்தல் முடிவடைவதற்குள் பிரதமர் பதவி குறித்து ‛ இண்டியா ' கூட்டணியில் மோதல் ஏற்பட்டு உள்ளது'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.ஹரியானா மாநிலம் பிவானியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 1962 ல் சீனாவுக்கு எதிரான போரில் இந்தியா தோற்றதற்கு இந்திய ராணுவத்தை காங்கிரஸ் குறை கூறியது. இன்றும் ராணுவத்தை அவமதிப்பதற்கான வாய்ப்புகளை காங்கிரஸ் தேடி வருகிறது. பழிவாங்கும் நோக்கில் 500 ரூபாயை வீசி எறிந்துவிட்டு ஒரே ரேங்க் ஒரே பென்சன் திட்டத்தை அமல்படுத்திவிட்டதாக காங்கிரஸ் கூறியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=804hssv8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தேர்தலில் நீங்கள் பிரதமரை மட்டும் தேர்வு செய்யப் போவதில்லை. நாட்டின் எதிர்காலத்தையும் தேர்வு செய்ய உள்ளீர்கள். இந்த தேர்தலில் ஒரு பக்கம், நீங்கள் சோதித்து முயற்சி செய்த சேவகன் மோடி உள்ளேன். மறுபக்கம் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.தேர்தல் முடிவதற்குள் பிரதமர் பதவி குறித்து இண்டியா கூட்டணியில் மோதல் உருவாகி உள்ளது. 5 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் பதவியேற்பார்கள் என்று அக்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். வகுப்புவாதம், ஜாதிவெறி மற்றும் வாரிசு அரசியலின் கலவையாக இண்டியா கூட்டணி உள்ளது.மோடி இருக்கும் வரை பழங்குடியினர், தலித்களின் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை ராமர் கோயில் கட்ட அனுமதிக்கவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAJI NATESAN
மே 23, 2024 20:56

பெரியவரே உங்க கட்சி நலன் மட்டும் பாருங்க மாற்றான் தோட்டது மல்லிகை மணக்கும்


முருகன்
மே 23, 2024 18:08

தினமும் ஒரு கதை


sundarsvpr
மே 23, 2024 17:51

பி ஜெ பி க்கு மாற்று தற்போது இல்லை வரும்காலத்தில் காண இயலுமா சந்தேகம் தற்போது நடப்பது மன்னர் ஆட்சி இல்லை மன்னருக்கு பதில் குடும்பம் குடும்பம் என்றால் ஓன்று அல்ல பல குடும்பங்கள் எந்த குடும்பத்தை நம்பி பொறுப்பை கொடுப்பது என்பது முக்கிய விஷயம் தடுமாறுவது குடும்ப கட்சிகள்தடுமாற்றம் தீராதவரை பி ஜெ பி க்கு மாற்று illai


Ramanujadasan
மே 23, 2024 16:42

பிரதமர் பதவிக்கு இந்தியாவில் தகுதியான ஒருவர் மோடி மட்டுமே அவர் இருக்கும் வரை வேறு யாரும் பிரதமராக வாய்ப்பே இல்லை


RAJI NATESAN
மே 23, 2024 21:03

இப்படி தான் இந்திரா தான் இந்தியா என்றவர் கதி தான் இவருக்கும்


ஆரூர் ரங்
மே 23, 2024 16:20

மோதல் என்பது தவறான செய்தி. ஜெயிக்க வாய்ப்பிருந்தால்தானே மோதிக்கொள்வர்? அத்தைக்கு மீசை முளைக்க வாய்ப்பில்லை.


J.Isaac
மே 23, 2024 17:17

வெள்ளை காக்கா மல்லாக்க பறக்குது


Kasimani Baskaran
மே 23, 2024 15:45

கம்மிகளும் காங்கிரசும் தமிழகத்தில் பங்காளிகள் - கேரளாவில் எதிரிகள் இந்திக்கூட்டணியில் தமிழக முதல்வர் யார் பிரதமர் என்பதை முடிவு செய்வார் - ஆனால் வட மாநிலங்களில் அவரால் பிரச்சாரம் செய்ய முடியாது மொத்தத்தில் இந்திக்கூட்டணி லாலு போன்ற ஊழல் கோமளிகளின் கூடாரம்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ