உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைவர்களுக்கு வாடகை ஹெலிகாப்டர் ரூ.400 கோடி சம்பாதித்த நிறுவனங்கள்

தலைவர்களுக்கு வாடகை ஹெலிகாப்டர் ரூ.400 கோடி சம்பாதித்த நிறுவனங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், ஹெலிகாப்டர் நிறுவனங்கள் 350 முதல் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தேர்தல் காலகட்டத்தின் போது, அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசார பயணத்துக்காக ஹெலிகாப்டர்களின் தேவை அதிகரிக்கும். குறிப்பாக, தேசிய கட்சிகளான பா.ஜ., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதற்காக, அதிகளவில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவர்.இந்நிலையில், தற்போதைய தேர்தலில், மாநில கட்சிகளும் அதிகளவில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தத் துவங்கியுள்ளன. இதன் காரணமாக, ஹெலிகாப்டர் வாடகை 50 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. ஹெலிகாப்டர்கள் மணிநேர அடிப்படையில் வாடகைக்கு எடுக்கப்படுகின்றன.

கட்டணம்

ஏழு நபர்கள் அமரக்கூடிய ஒற்றை என்ஜின் ஹெலிகாப்டருக்கான ஒரு மணி நேர வாடகை, 1.30 - 1.50 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. எட்டு நபர்கள் அமரக்கூடிய இரட்டை என்ஜின் ஹெலிகாப்டருக்கான கட்டணம் 2.30 - 3.00 லட்சம் ரூபாய். 15 பேர் வரை அமரக்கூடிய 'அகஸ்டா வெஸ்ட்லேண்ட்' ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேர கட்டணம், 4 லட்சம் ரூபாய் முதல் வசூலிக்கப்படுகிறது.இதுகுறித்து நிபுணர்கள் தெரிவித்ததாவது: கடந்த தேர்தலின் போது, வழக்கத்தை விட 20 முதல் 30 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலித்தனர். இந்த தேர்தலில் கூடுதலாக 50 சதவீதம் வரை வசூலிக்கின்றனர். ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்காத நிலையில், மாநில கட்சிகளின் ஆர்வத்தால் தேவை அதிகரித்துள்ளது.அனைத்து விதமான ஹெலிகாப்டர்களையும் கணக்கில் கொள்ளும் பட்சத்தில், மொத்தம் 200 ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தேர்தல் காலகட்டத்தில், இவற்றின் வாயிலாக குறைந்தபட்சம் 350 முதல் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டிருக்கும்.தேர்தல்களின் போது, ​​ஹெலிகாப்டர் நிறுவனங்கள் 45 - 60 நாட்கள் வரையிலான நீண்ட கால வாடகைக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன. குறிப்பாக பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்கூட்டியே வாடகைக்கு எடுத்து விடுகின்றன. மேலும் இத்தகைய ஒப்பந்தங்களில் குறைந்தபட்ச உத்தரவாத மணிநேரமாக, ஒரு நாளுக்கு இரண்டரை முதல் மூன்று மணி நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.அதாவது ஹெலிகாப்டர் உபயோகப்படுத்தப்பட்டாலும், இல்லாவிட்டாலும், இந்த நேரத்திற்கான கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டும். எனவே, 60 நாட்களுக்கு வாடகை எடுக்கப்படும்பட்சத்தில், நிச்சயம் 180 மணிநேரத்துக்கான பணத்தை செலுத்தியாக வேண்டும்.ஒரு மணி நேரத்திற்கு 3 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் என்ற பட்சத்தில், 180 மணி நேரத்திற்கு, குறைந்தபட்சம் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டியது இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Vathsan
மே 29, 2024 17:03

இந்த 400 கோடியில் 350 கோடி மோடிஜிக்கு என்பது குறிப்பிடத்தக்கது.


A1Suresh
மே 29, 2024 16:13

ஈரான் அதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டர் போல ஒன்றை பப்புவிற்கு தந்து விடுங்கள். பிரச்னை தீர்ந்தது


Jai
மே 29, 2024 14:40

மக்கள் கட்சியின் கொள்கைகளையும், ஆளும் திறனையும் அவர்களின் முந்தைய செயல்திறனையும் பார்த்து ஓட்டு போட்டால் இப்படுயெல்லாம் கட்சிகள் ஊதாரி தனமாக செலவு செய்ய மாட்டார்கள்


vijay
மே 29, 2024 13:24

இந்த ராஹுலு சொன்னாப்புல, அவுங்க கட்சி வேட்பாளர்களுக்கு டெபாசிட் கட்டகூட பணம் இல்லை என்று. இப்போ?. பேசறதெல்லாம் பொய்யி.


Azar Mufeen
மே 29, 2024 23:07

ஏன் நிர்மலா அவர்கள் கூட தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லை என்றார்களே அத விட்டுட்டீங்களே


Ramesh Sargam
மே 29, 2024 12:43

எந்த மரியாதைக்குரிய அப்பா வீட்டு பணம்?


Ramesh Sargam
மே 29, 2024 11:52

இவையெல்லாம் கூட தேர்தல் செலவில் காட்டுவார்களா? இப்படி பிரயாணம் செய்ய எங்கிருந்து பணம் வருகிறது?


ஆதித்யா
மே 29, 2024 11:29

சொகுசு விமானத்தில் போறதுக்கு கட்டணம் கிடையாது. ஓட்டல்ல தங்கினா வாடகையும் தரமாட்டாங்க.


ஆரூர் ரங்
மே 29, 2024 10:28

ஜகத் , KAL போன்ற கழக கார்பரேட் தலைவர்களது ஹெலி, விமானங்களும் பயன்படுத்தபட்டாலும் செலவுக் கணக்கில் சேர்க்கப்படுமா என்பது சந்தேகம்.


Lion Drsekar
மே 29, 2024 10:14

அந்த நிறுவனங்களின் சந்தாக்காரர்கள் யார் என்று கூறினால் நன்றாக இருக்கும். தனியராக இருக்க கண்டிப்பாக வாய்ப்பே இருக்காது . அப்படி இருந்தால் அவர் எல்லா நிலைகளிலும் படி அளக்கவேண்டும் இல்லைஎன்றால் அந்த நிறுவனங்கள் கட்சிக்காரர்களின் சொத்தாக இருக்கும், சாராயக்கடை முதல் ... நல்லவேளை சுடுகாடு தனியாருக்கு சொந்தம் இல்லை, அப்படி இருந்தால் அதையும் இவர்களே வாங்கியிருப்பார்கள். வந்தே மாதரம்


duruvasar
மே 29, 2024 10:13

வருடத்தில் முக்கால்வாசி நாட்கள் வெளிநாடுகளுக்கு பறக்கும் பப்பு மம்மு பாப்பாவுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை