உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் ஆணையத்தில் சிவகுமார் மீது புகார்

தேர்தல் ஆணையத்தில் சிவகுமார் மீது புகார்

பெங்களூரு : ஆசிரியர்களை பிரசாரம் செய்யும்படி கட்டாயப்படுத்துவதாக, துணை முதல்வர் சிவகுமார், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு அமைச்சர் மது பங்காரப்பா மீது, கர்நாடகா மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், ம.ஜ.த., புகார் அளித்து உள்ளது.கர்நாடகா மேலவையில் காலியாக உள்ள, பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கு வரும் 16ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் புட்டண்ணா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ., கூட்டணி வேட்பாளராக ரங்கநாத் களத்தில் உள்ளார்.இந்நிலையில் பெங்களூரு சேஷாத்திரி சாலையில் உள்ள, கர்நாடகா மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், ம.ஜ.த., தலைவர்கள் நேற்று அளித்த புகார்:பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கு, எம்.எல்.சி.,யை தேர்ந்து எடுக்க நடக்கும், இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணாவை ஆதரித்து பிரசாரம் செய்யும்படி, ராம்நகர், பெங்களூரு ரூரல் மாவட்ட ஆசிரியர்கள், வட்டார கல்வி அதிகாரிகளை, துணை முதல்வர் சிவகுமார், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை அமைச்சர் மது பங்காரப்பா ஆகியோர் கட்டாயப்படுத்துகின்றனர். அதிகாரத்தை இருவரும் துஷ்பிரயோகம் செய்கின்றனர். இருவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ