உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தோல்வியை ஒப்புக்கொண்ட காங்., பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேட்டி

தோல்வியை ஒப்புக்கொண்ட காங்., பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேட்டி

சிக்கமகளூரு: ''லோக்சபா தேர்தலில் தோல்வியை, காங்கிரஸ் ஒப்பு கொண்டு உள்ளது,'' என்று, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறியுள்ளார்.சிக்கமகளூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:'லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறாவிட்டால், வாக்குறுதி திட்டங்கள் ரத்து செய்யப்படும்' என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறியுள்ளார். இதன்மூலம் லோக்சபா தேர்தல் தோல்வியை, காங்கிரஸ் ஒப்பு கொண்டு உள்ளது. நாங்கள் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகளால், காங்கிரஸ் தலைவர்கள் அரண்டு போய் உள்ளனர். கர்நாடகாவிலும் அரசுக்கு எதிராக எழுந்து உள்ள எதிர்ப்பு அலையில், காங்கிரசார் அச்சத்தில் உள்ளனர்.காங்கிரஸ் அரசு செய்யும் தவறை, நாங்கள் சுட்டிக்காட்டுவோம். வாக்குறுதி திட்டங்களை நிறுத்துவோம் என்று, மாநில மக்களை எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா பிளாக்மெயில் செய்து உள்ளார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சரியான அரசு பஸ் வசதி இல்லை. விவசாயிகள் பம்ப்செட்களுக்கு மின்சாரம் வழங்க முடியவில்லை.மாண்டியா கெரேகோடு பிரச்னையை, மாநில மக்கள் பார்த்து கொண்டு உள்ளனர். ஹனுமன் கொடி ஏற்றுவதற்காக, கிராம மக்கள் முடிவு செய்து உள்ளனர். ஆனால் அந்த கொடியை இறக்கிவிட்டு, தேசிய கொடி ஏற்றினர். தேசிய கொடி ஏற்றியதிலும், விதிகளை கடைப்பிடிக்கவில்லை.இதற்காக நாட்டு மக்களிடம், காங்கிரசார் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் அரசு இக்கட்டான நிலையில் உள்ளது. சித்தராமையாவால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ராம பக்தர்கள், அரசின் நடவடிக்கையை கவனித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை