உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவி?: சித்தராமையா, சிவகுமார் கப்சிப்

காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவி?: சித்தராமையா, சிவகுமார் கப்சிப்

கர்நாடகா காங்கிரஸ் அரசு மீதான சேதத்தை கட்டுப்படுத்தும் வகையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவி வழங்க சோனியா திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடகாவில் 2023ல் 135 இடங்களுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. பல நெருக்கடிகளுக்கு இடையில், ஓராண்டை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நிறைவு செய்துள்ளது. முதல்வர் சித்தராமையா தரப்பும், துணை முதல்வர் சிவகுமார் தரப்பும் அவ்வப்போது உறுமிக் கொண்டுள்ளனர். இதில் தலைவர்கள், குட்டி தலைவர்கள் என்ற பாகுபாடு இல்லை.

பலத்த அடி

லோக்சபா தேர்தல் முடிவு, இரு தரப்பினருக்கும் பலத்த அடியாக கருதப்படுகிறது. அதனால் முதல்வர் மாற்றம், கூடுதல் துணை முதல்வர்கள் நியமனம் ஆகிய பிரச்னைகளை கையில் எடுத்துக் கொண்டு உள்ளனர்.சித்தராமையா ஆதரவாளர்கள், மூன்று துணை முதல்வர் பதவியை உருவாக்க வேண்டும் என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடத் துவங்கி உள்ளனர். இது சோனியா, ராகுலுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், 83வது பிறந்த நாளான, ஜூலை 21ல், காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, சோனியா உட்பட பல தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். அத்துடன், பெங்களூரில் அவரது இல்லத்தில் வெளியே நின்றிருந்த தொண்டர்கள், 'கார்கேவுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும்' என்று கோஷம் எழுப்பினர்.

சோனியா கசப்பு

சில நாட்களுக்கு முன்பு புதுடில்லி சென்றிருந்த முதல்வர் சித்தராமையா, சோனியாவை சந்தித்துள்ளார். அப்போது சோனியா, “கர்நாடகாவில் முதல்வர், துணை முதல்வர் பதவி தொடர்பாக அமைச்சர்கள் பேசுவது, மாநில மக்களிடையே கட்சியின் மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது,” என அதிருப்தி தெரிவித்தார்.மேலும், “மாநில காங்கிரஸ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை மக்களும் நம்பத் துவங்கி உள்ளனர். இவ்வேளையில், முதல்வர் மாற்றம் குறித்த பேச்சு எழும்போது, முதல்வர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை முன்மொழிய உள்ளேன்,” என தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.மேலிட தலைவர் ஒருவர் கூறுகையில், 'தற்போது காங்கிரஸ் தலைவராகவும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராகவும் கார்கே சிறப்பாக செயல்படுகிறார். லோக்சபாவில் வலுவான எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் அறியப்படுகிறார். இதனால் கார்கேயின் அடையாளம் சற்று குறைந்துள்ளது. கட்சிக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வரும் கார்கேவுக்கு கவுரவம் அளிக்கும் வகையில், முதல்வர் பதவி வழங்க சோனியா விரும்புகிறார்' என்றார்.மேலிடத்தின் இந்த அதிரடியை சற்றும் எதிர்பார்க்காத சித்தராமையா, சிவகுமார் தரப்பு பதவி தொடர்பாக எதுவும் பேசாமல், 'கப்சிப்' ஆகி உள்ளனர்.நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Subash BV
ஜூலை 25, 2024 13:58

Next CM is DKS. Already fixed ELSE CONGRESS WILL VANISH FROM KARNATAKA.


Ram Siri
ஜூலை 24, 2024 11:11

அப்படியான DK சிவகுமார் கு சங்குதானா... பாவம் மல்லிகார்ஜுன கார்கே ஒரு போதும் அவர் ஜென்மத்துல CM ஆக மாட்டார்.. ? % உண்மை


தமிழ் மைந்தன்
ஜூலை 23, 2024 21:37

வேற ஒன்றும் இல்லை . தனது மகனுக்கு மீண்டும் தலைவர் பதவி கொடுக்கவேண்டும் எனவே கார்கே மீண்டும் மாநில அரசுக்கு போனால்மட்டும முடியும் . மேலும் பிஜேபி ஆட்கள் காங்கிரஸ் தலைவர் என கார்கேயை அழைப்பது பிடிக்கவில்லை


sankaranarayanan
ஜூலை 23, 2024 20:36

சோனியாவின் சரியான யோஜனை அமல்படுத்திவிடலாம் கர்நாடகம் மாநில காங்கிரசு இனி மூன்றாக பிரியும் சிந்துவின் கோஷ்டி ஒன்று சிவாவின் கோஷ்டி இரண்டு மூன்றாவதாக கார்க்கியின் கோஷ்டி என சோனியா காங்கிரசு ராகுல் காங்கிரசு பிரியங்கா காங்கிரசு என்று அவர்களே பிரித்து ஆள்வார்கள் வாழ்க ஆட்சியில் மூன்றாக கர்நாடகம்


ஆரூர் ரங்
ஜூலை 23, 2024 19:25

இரு பெரிய சமூகங்களும் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள் . ஆனால் பட்டியலின ஆள் வருகிறார்கள் என்றால் இரண்டும் ஒண்ணா சேர்ந்து எதிர்ப்பர். அங்கு வடமாநில தரம் சிங் முதல்வராக முடிந்தது. ஆனா உள்ளூர் SC? இப்போதைக்கு வாய்ப்பேயில்லை .


Barakat Ali
ஜூலை 23, 2024 22:34

சித்தராமையா பட்டியலினத்தவர்தானே ??


Kasimani Baskaran
ஜூலை 23, 2024 19:15

தமிழக காங்கிரஸ் போல வேஷ்டி அவிழ்த்து போன்ற நாடகங்கள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கலாம்..


sethu
ஜூலை 23, 2024 18:57

இதுதான் வூரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாடம் இது கர்நாடகாவின் இன்றைய தாலவார்களுக்கு திண்டாடம் மக்களுக்கு, இதுக்கு பேசாமல் பணக்கார கள்ளநோட்டு டி கே சிவகுமாருக்கு முதல்வர் பதவி கொடுக்கலாம் கார்க்கே நோ . கருணாநிதியும் கார்கியும் பணம் பதவிக்காக யார் காலிலும் விழுவார்கள் .


Anand
ஜூலை 23, 2024 18:41

இரண்டு கோஷ்டியாக பிரிந்து ஒருவருக்கொருவர் அடித்து கட்டி புரண்டு உருண்டுக்கொண்டிருக்கும் கர்னாடக காங்கிரஸ் அரசு இனி மூன்று கோஷ்டியாக முன்னேற்றம் அடைந்து தொடர்ந்து உருளும்.


v j antony
ஜூலை 23, 2024 18:02

83 வது வயதில் முதல்வர் பதவியை கொடுப்பது ஏன் ? இது ஒன்றும் கவர்னர் பதவி அல்ல


Ramesh Sargam
ஜூலை 23, 2024 17:48

கப்சிப்…


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை