உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு விஜயேந்திரா பதிலடி

காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு விஜயேந்திரா பதிலடி

பெங்களூரு: 'கர்நாடகத்துக்கு வரி பங்கீடு, மானியம் வழங்குவதில் மத்திய பா.ஜ., அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டுகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் கேட்க பா.ஜ.,வினருக்கு தைரியம் இல்லை. பா.ஜ., - எம்.பி.,க்கள் ஆண்கள் அல்ல. வெறும் ஷோ பீஸ்' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தெரிவித்திருந்தார்.இவரின் பேச்சுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இதுதொடர்பாக, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, தன் 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறினாலும், நேரு குடும்பத்தின் அடிமைத்தனத்தில் இருக்கும் பாலகிருஷ்ணா போன்ற காங்கிரசாருக்கு, கீழ்த்தரமான நிலை ஏற்பட்டுள்ளது,'' என குறிப்பிட்டு உள்ளார்.அத்துடன், மறைந்த பிரதமர் இந்திரா முன், காங்கிரஸ் தலைவர்கள் நின்றிருக்கும் படத்தை இணைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ