மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
25 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
26 minutes ago
மும்பை : மஹாராஷ்டிராவில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., மிலிந்த் தியோரா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள தெற்கு மும்பை தொகுதியில் காங்., சார்பில், கடந்த 2004 மற்றும் 2009ல் போட்டியிட்டு எம்.பி., யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மிலிந்த் தியோரா.இவர் மறைந்த காங்., மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன். கடந்த 2014 மற்றும் 2019ல் சிவசேனா வேட்பாளர் அரவிந்த் சாவலிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில், இந்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டிருந்தார். தொகுதி பங்கீட்டின் போது 'இண்டியா' கூட்டணியில் உள்ள உத்தவ் பாலாசாகேப் சிவசேனா அணிக்கு, அந்த தொகுதியை விட்டு கொடுக்க காங்கிரஸ் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தெற்கு மும்பை தொகுதியில் சிவசேனா போட்டியிடும் என உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவை சேர்ந்த எம்.பி., சஞ்சய் ராவத்தும் கூறி இருந்தார்.
14 minutes ago
14 minutes ago
25 minutes ago
26 minutes ago