உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் கட்சி வரவேற்பு

காங்கிரஸ் கட்சி வரவேற்பு

புதுடில்லி : அன்னா ஹசாரே, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதை, காங்கிரஸ் வரவேற்றுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது: பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று, அன்னா ஹசாரே, தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதை, காங்கிரஸ் வரவேற்கிறது. இது, இந்திய ஜனநாயகத்தில் அங்கம் வகிக்கும், அனைத்துத் தரப்பினருக்கும் கிடைத்த வெற்றி. ஹசாரே தரப்பின் நெருக்கடிக்கு, அரசு அடிபணிந்து விட்டதாகக் கூறுவது தவறு. யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி என்பது பற்றியெல்லாம் பேசக் கூடாது. இவ்வாறு, அபிஷேக் சிங்வி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ