உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் கூறியது அண்டப்புளுகு; காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தில் விளாசினார் பிரதமர் மோடி!

காங்கிரஸ் கூறியது அண்டப்புளுகு; காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தில் விளாசினார் பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் சொன்னது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.ஜம்முவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சியால் மக்கள் சோர்வடைந்து விட்டனர். அவர்கள் ஆட்சியில் நிலவிய ஊழல், வேலைவாய்ப்பில் பாகுபாடு ஆகியன தொடர்வதை மக்கள் விரும்பவில்லை. இனியும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் நிலவுவதையும் அவர்கள் விரும்பவில்லை. அமைதி, குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் ஆகியவற்றை விரும்புகின்றனர். இதற்காக பா.ஜ., ஆட்சி வர வேண்டும் என காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர்.கடந்த இரு கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுகள் மக்களின் மனநிலையை காட்டுகின்றன. அதில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளது. முழு மெஜாரிட்டியுடன் பா.ஜ., ஆட்சி அமைக்கும்.நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை ஒரு போதும் காங்கிரஸ் மதித்தது கிடையாது. அக்கட்சி தான், ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்திற்காக ராணுவ வீரர்களை நான்கு தசாப்தங்களாக காக்க வைத்தது. இத்திட்டத்தால், அரசு கருவூலம் காலியாகும் என ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் சொன்னது. ஆனால், நான் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலனை விட அரசு கருவூலத்தை நான் பெரிதாக பார்க்கவில்லை.குண்டு சத்தம் கேட்ட போது எல்லாம் காங்கிரஸ் வெள்ளை கொடி காட்டியதை மறக்கக்கூடாது. துப்பாக்கிகளுக்கு குண்டுகள் மூலம் பா.ஜ., ஆட்சியில் பதிலடி கொடுக்கப்பட்ட போது தான், எதிர்புறத்தில் இருந்தவர்களுக்கு உணர்வு வந்தது. 2016 ம் ஆண்டு செப்.,28 அன்று தான் இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

kulandai kannan
செப் 28, 2024 21:43

ONOP உண்மையில் அவசியமா என்று யோசிக்க வேண்டும். 82 வயது ஓய்வூதியருக்கு எந்த பெரும் செலவுகளும் இருக்க வாய்ப்பு குறைவு. அவருக்கு ஏன் 62வயது ஓய்வூதியருக்கு இணையான பென்ஷன்?


kantharvan
செப் 28, 2024 18:08

பொய் சொல்லி நாட்டு மாக்களை ஏமாற்றும் உரிமை தங்களுக்கு மட்டுமே உரித்தானது மகாபிரபு.


Thirumal s S
செப் 28, 2024 16:24

காங்கிரஸ் பேசியது அண்டப்புளுகு னா தாங்கள் பேசியது என்னவோ அய்யா?


Lion Drsekar
செப் 28, 2024 14:40

சுதந்திரம் பெருக்கத்திற்காக பாடுபட்டவர்கள் பெயர்கள் அவர்கள் உடும்பத்தார்களே மறந்து போய்விட்டார்கள், இப்போதேல்லாம் குறுநில மன்னர்களின் மற்றும் மாமன்னர்கள் பெயர்களிலில்தான் உலகமே இயங்கிக்கொண்டு இயங்கிக்கொண்டு இருக்கிறது அப்படி இருக்க ஆண்ட புளுகி, ஆகசப்புளுகு, நிரந்தர புளுகு, நித்திய புளுகு என்று புளுகிலேயே வளர்ந்து, புளுகிலேயே வாழ்ந்து வரும் ஜீவராஜிகளுக்கு திரு கர்மவீரர், திரு அப்துல்கலாம், திரு வ வு சிதம்பரனார், சுப்ரமணிய பாரதியார், திரு கக்கன் , திரு ஏழ்மையியேலே வாழ்ந்த அவர் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில் அவருடைய உடமைகளை தூக்கி எரிந்தும் ஹான் முன்னாள் பிரதமர் கூட சொல்லாமல் வாழ்ந்த எளிமை மற்றும் அவர்களின் கொள்கைகள் அல்லது அவர்கள் பின்பற்றிய சுதந்திர நாட்டின் மாண்பினை யாராவது ஒருவர் பின்பற்றுகிறார்களா ? இங்கு நீங்கள் எளிமையாக வாழ்ந்து என்ன பயனைக் கண்டீர்கள் இங்கு மழை பொழியவில்லை, வெள்ளம், பஞ்சம், வறுமை, விலைவாசி ஏற்றம், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் தங்கள் மீதும் , தாங்கள் சார்ந்த கட்சிகளின் மீதும் போதாதற்கு இந்துக்கள் மற்றும் அவர்கள் ஆர்ந்த ஒரு பிரிவினவர்களே காரணம் என்று தினம் மூலைக்கு மூலை பிரச்சாரங்கள் செய்துகொண்டும் , பொய்யையே மூலதனமாகக் கொண்டு செயல்படும்போது எதுவுமே எடுபடாது . வந்தே மாதரம்


K.n. Dhasarathan
செப் 28, 2024 14:04

கடந்த ப த்து ஆண்டுகளாக பொய் ஜே பி அரசுதான் ஆட்சியில் உள்ளது, இப்போதும் காஸ்மீரில் தினமும் குண்டு சத்தந்தான் கேட்கிறது, அமைதி பூங்கா ஆகிவிட்டதா ? பொய்யர்கள் ஆட்சி என்பதை பிரதமரும் தினமும் நிரூபிக்கிறார், உருப்படியாக ஏதாவது செய்தால்தான் அமைதி வரும், கையை தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என்றால் அமைதி வராது, உள்துறை அமைச்சரை னுப்புங்கள், இன்னும் பெண்ச்சை தேய்க்கணுமா ? வேலையை பார்க்க சொல்லுங்கள்.


ஆரூர் ரங்
செப் 28, 2024 14:54

முப்பது ஆண்டுகளாக அண்டை நாட்டின் உதவியுடன் பயங்கரவாதிகள் ஆட்டம் போட்ட போது எங்கே இருந்தீர்கள்? இப்போ ராணுவம் மீது கல்லெறி நின்றுவிட்டது. காங்கிரஸ் தலைவரே பிரிவினைவாத ஆதரவாளருடன் அளவளாவி புகைப்படம் எடுத்து மகிழ்விக்கிறார். இவற்றையெல்லாம் தாண்டி அமைதியாக தேர்தல் நடக்கிறதே.


M Ramachandran
செப் 28, 2024 15:39

என்னமோ காஷ்மீருக்கெ சென்று வந்தது போல் காங்கிரஸிற்கு பீ பீ வாசிக்கிறீர்கள். ராணுவக்ஞ் வீர்களை கேளுங்கள். அவர்கள் இப்போதுள்ள நிலமையும் பால்யா தொடை நடுங்கிகள் காலத்தையும் அறிவார்கள். சரியான ராணுவ உபகாரணகள் கொடுக்காமல் கஞ்சத்தனம் காட்டியவர்கள். வீரம் சினிமாவில் காட்டியது அது உண்மை சம்பவம். பாகிஸ்தான் மும்ப குண்டு வெடிப்பில் அஆதரவு அளித்தவர்கள் இப்போது காங்கிரஸுடன் ஒப்பந்தத்திலுள்ள மூத்த மூத்த தலையவர். ஏன் இஙகு கோவையில் கடந்த தீபாவளி சமயத்தில் கார் வெடித்து பலியானான் ஒரு தீவர வாதி கும்பலை சேர்ந்தவன் இஙகு எப்பெடி எப்படி கயிறு திருத்தி ஜிங்ச்சா ஊடகங்களும் போலீசும் நடித்தார்கள். மறந்துடுச்சி. பீ ஜீ பி தமிழகத்தில் அஆட்சிக்கு வந்தால் ஒரு கும்பலுக்கு அஸ்தியில் ஜுரம் அந்த விடும்


Amsi Ramesh
செப் 28, 2024 16:02

சார் இப்போதான் விழித்திருக்கிறார் போலும்,, காஸ்மீரின் இன்றய விவரம் தெரியவில்லை பாவம்


hari
செப் 28, 2024 17:50

100 ரூபாய் தசரதான் இனிமே 200 ரூபாய் தசராதான்


Barakat Ali
செப் 28, 2024 13:54

ஊழல் ஒழியணும் ...... வேலைவாய்ப்பு அதிகரிக்கணும் .....


சமீபத்திய செய்தி