மேலும் செய்திகள்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு முன்னாள் நீதிபதிகள் 56 பேர் ஆதரவு
2 hour(s) ago | 33
அரசியல் கட்சியின் கருவியான தேர்தல் கமிஷன்; டி.கே. சிவகுமார் புகார்
3 hour(s) ago | 2
புதுடில்லி: நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்திய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் லாபத்திற்காக, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆன்மிக அரசியல் செய்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா, மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதை தொடர்ந்து, விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர். இது குறித்து நிருபர்களுக்கு மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது: இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முதலில், ராமர் கோயில் கட்டுவதில் காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தியது. இப்போது கும்பாபிஷேக விழாவை அவமதிக்கிறார்கள். நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்திய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.7வது முறை விருது
இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் ம.பி.,யின் இந்தூரும், குஜராத்தின் சூரத் நகரும் முதலிடத்தை பிடித்துள்ளன. இந்தூர் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்து மோகன் யாதவ் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தூர் மாநகராட்சிக்கு ஏழாவது முறையாக தூய்மையான நகரம் என்ற விருது கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 33
3 hour(s) ago | 2